விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தற்புஎன்னைத்*  தான் அறியானேலும்*  தடங்கடலைக் 
  கல்கொண்டு*  தூர்த்த கடல்வண்ணன்*  என்கொண்ட
  வெவ்வினையும் நீங்க*  விலங்கா மனம் வைத்தான்* 
  எவ்வினையும் மாயுமால் கண்டு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தட கடலை - பரந்த தெற்கு சமுத்ரத்தை
கல் கொண்டு - மலைகளினால்
தூர்த்த - அணைசெய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான் - கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை - (தோஷமு வடிவெடுத்தவனான) என்னை

விளக்க உரை

என்னுடைய குற்றமிகுதியை நோக்கி எம்பெருமான் என்னை இகழாமல், என்னுடைய ஸமஸ்த கருமங்களும் உருமாய்ந்து போம்படியாகத் தன் திருவுள்ளத்தை என்பக்கலிலே வைத்தருளினானென்கிறார். கடல்வண்ணன் தான் என்னைத் தற்பு அறியானேலும் – ஆழ்வாராகிய தம்மை எம்பெருமான் உள்ளபடி யறிந்திலனென்கிற இதன் கருத்து யாதெனில், இவர் குற்றங்களுக்குக் கொள்கலமாயிருப்பவர், இவிடத்தில் ஒருவகைக்குணமும் கிடையாது“ என்று அறிந்துகொள்ள வேண்டியிருக்க அப்படியறிந்து கொண்டிலன் என்கிறார் நைச்யா நுஸநதாந நிஷ்டையினால். (எம்பெருமானை நாம் உள்ளபடி அறிகையாவது –ஒருவகைக் குற்றங்குறையுமற்ற குணநிதி என்று அறிவதாம். அப்பெருமான் நம்மை உள்ளபடி யறிகையாவது ‘ஒருவகைக்குணமுமற்ற தோஷநிதி‘ என்று அறிவதாம். அவனை நாம் உள்ளபடியறியப் பெற்றால் அவனிடத்தில் நமக்கு அன்பு கரைபுரளும், நம்மை அவன் உள்ளபடியறிந்து கொண்டால் நம்மிடத்தில் அவனுக்கு இகழ்ச்சியுண்டாகும்.) இங்கு ஆழ்வார்தம்மிடத்தில் எம்பெருமானுக்கு இகழ்ச்சி பிறவாமல் விருப்பமே பெருகிச் செல்கின்றமைக்குக் காரணம் இவருடைய ஞானபக்தி முதலிய குணங்களைக் கண்டே, அப்படியிருந்தும் ஆழ்வார் நைச்யாநுஸந்தான வுறைப்பினால் ‘என் ற்றங்குளைகளை எம்பெருமான் தெரிந்துகொள்ளாமையினால் மேல்விழுகிறான்‘ என்கிறார்.

English Translation

The ocean-hued Lord who built a bridge on the ocean, though he did not know me, made arrangements to ensure that my karma did not accrue on me. So now, no matter how strong, karmic sin cannot affect me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்