விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாட்டும் முறையும்*  படுகதையும் பல்பொருளும்* 
  ஈட்டிய தீயும் இருவிசும்பும்*  கேட்ட
  மனுவும்*  சுருதி மறை நான்கும்*  மாயன் 
  தனமாயையில் பட்டதற்பு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கருதி - அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும் - நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன - ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட - ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு - தத்துவங்களாம்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “வைகுந்தச்செல்வனார் சேவடிமேல் பாட்டு –நாக்கொண்டு மானிடம்பாடேன்“ என்றார், எம்பெருமானொருவனையே கவிபாடும்படியான உறுதி தமக்கு உண்டானபடி யெங்ஙனேயென்ன, உலகத்திலுள்ள வாச்யங்கள் வாசகங்கள் எல்லாம் அப்பெருமானுடைய திவ்யஸங்கல்பத்தாலே உண்டாயினவென்று இப்பாட்டால் அருளிச்செய்யும் முகத்தால் தமது உறுதிக்கு அடிகூறினாராயிற்று.

English Translation

Songs, modes of worship, stories of yore, the smritis of Manu, the Srutis of Vedas four, the sacred fire, the sky,-all these are created by the wonder lord's miraculous powers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்