விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செவிக்கு இன்பம் ஆவதுவும்*  செங்கண்மால் நாமம்* 
  புவிக்கும் புவிஅதுவே கண்டீர்*  கவிக்கு
  நிறை பொருளாய் நின்றானை*  நேர்பட்டேன்*  பார்க்கில் 
  மறைப்பொருளும்*  அத்தனையே தான்  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செவிக்கு இன்பம் ஆவதுவும் - கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம் - புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு - பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே - (நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத்திருநாமமே
கவிக்கு நிறைபொருள் ஆய்நின்றானே - பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை

விளக்க உரை

உரை:1

எம்பெருமானுடைய திருநாமம் யமவச்யதையைத் தவிர்க்குமென்றது கீழ்பாட்டில், அதனால் திருநாமத்தின் பாவநத்வம் (தூய்மை) சொல்லப்பட்டதாயிற்று, அப்படி பாவநமாயிருப்பதோடு மிகவும் போக்யமுமா யிருக்குமென்கிறது இப்பாட்டில். 1.“தோளாத மாமணியைத் தொண்டர்க்கினியானைக், கேளாச்செவிகள் செவியல்லா கேட்டாமே“ என்றும், 2. “***“ என்றுஞ் சொல்லுகிறபடியே எம்பெருமானுடைய திருக்குண சேஷ்டிதங்களையும் அவற்றுக்கு வாசகமான திருநாமங்களையும் கேட்பதே காதுக்கு இன்பம் என்பது முதலடி. புவிக்கும் புலி அதுவே கண்டீர் –இப்பூலோகத்திலுள்ளார் அனைவரும் ஸம்ஸாரதாபந்தீர நிழலுக்கொதுங்கி வாழவேண்டுமிடம் அந்த பகவந்நாமமே என்கை. “***“ என்னும் வடசொல்லோ புவியெனத் திரிந்தது. அது இலக்கணையால், பூமியிலுள்ளாரைக் குறித்தது புவிக்கும் என்றவிடத்து. அதற்குமேலுள்ள புவியென்னுஞ்சொல் ஸ்தாநமென்னும் பொருளது. “செவிக்கின்பமாவதுவுஞ் செங்கண்மால் நாமம்“ என்று நீர் திருநாமத்தின். போக்யதையில் ஈடுபடும்படியாக எங்ஙனே பெற்றீர்? என்று கேட்பார்க்குப் பின்னடிகளால் விடையளிக்கிறார் போலும். கவிக்கு நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன் – எம்பெருமானை நான் யாத்ருச்சிகமாகக் கிட்டப்பெற்றேன் என்கை. நானாக ஒரு க்ருஷிபண்ணி பகவத்விஷயத்தில் ஈடுபட்டேனல்லேன். விதிவசமாக நேர்ந்தது என்றவாறு. பார்க்கில் மறைபொருளும் அத்தனையே தான் – எனக்கு யாத்ருச்சிகமாக நேர்பட்டதென்பது இருக்கட்டும், உண்மையில் வேதாந்த ரஹஸ்யப் பொருளை ஆராயுமிடத்து முன்னடிகளிற் சொன்ன அர்த்தமே ஸகல வேதஸாரப் பொருளாயிருக்கும் என்றபடி. கவிக்கு நிறைபொருளாய் நின்றானை – எம்பெருமானுக்கு உரிய விசேஷணங்க ளெல்லாவற்றினும் இவ்விசேஷணம் மிகச் சிறந்ததாகும். எம்பெருமானைத் தவிர்த்து மற்றையோரைச் கவிபாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருடித் திருடிக் கவிபாட வேண்டும். அங்ஙனன்றிக்கே எம்பெருமான் கவிக்கு நிறைந்த பொருளாயிருப்பன், * ஏற்கும் பெரும்புகழ் வானவரீசனாகையாலே. “***“ என்ற ஸ்ரீரங்க ராஜஸ்தவஸூக்தி இங்கு ஸ்மரிக்கத்தகும்.

உரை:2

இவர்கள் வெறும் கவிதை சமைக்கவில்லை. அநுபூதி நிலையில் தாம் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை கவிதை என்ற ஊடகத்தின் வழியே உலகு அறியச் செய்கின்றனர். அதனால்தான் திருமழிசை கவிக்கு நிறைபொருளாய் செங்கண்மாலைக் காண்கின்றார். இவர் அவனை நேர்கொண்ட அநுபவத்தை கவிதையாக்கித் தருகிறார். இதை "அருளிச் செயல்" என்கின்றனர்.

English Translation

Sweet to the ears are the lord senkanmal's names. It is the refuge of all men, I have found it excellent for my poetry. Come to think, it is the very substance of the Vedas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்