விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போதான இட்டுஇறைஞ்சி ஏத்துமினோ*  பொன்மகரக் 
  காதானை*  ஆதிப் பெருமானை*  நாதானை
  நல்லானை நாரணனை*  நம்ஏழ் பிறப்புஅறுக்கும் 
  சொல்லானை*  சொல்லுவதே சூது.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆதி - ஜகத்காரண பூதனும்
பெருமானை - பெருமை பொருந்தியவனும்
நாதனை - (அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை - (ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை - நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்

விளக்க உரை

‘போதுகளை யிட்டிறைஞ்சி‘ என்னாமல் ‘போதான விட்டிறைஞ்சி‘ என்றதன் கருத்து யாதெனில், எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேணுமென்கிற சுத்தபாவத்துடனே கொள்ளுகிற புஷ்பம் எதுவாயினுங் குற்றமில்லை, ‘செண்பக மல்லிகைமொரு பூவாயிருக்கலாம் என்பதாம். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்விடத்து வியாக்கியானத்தில் – “இன்ன புஷ்பமென்று நியதியில்லை, பூவானதை யெல்லாவற்றையுங்கொண்டு திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்“ என்றருளிச்செய்தது காண்க. இதனால், இன்ன பூ என்று நிர்ப்பந்த மில்லாமையால் பூவென்று பேர்பெற்றிருக்கு மத்தனையே வேண்டுமென்றதாயிற்று. திருவாய்மொழியில் (1-6-1) “பரிவதிலீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர், பிரிவகையின்றி நன்னீர்தூய்ப் புரிவதுவும் மேவலுறுவீர், பிரிவகையின்றி நன்னீர்தூயப் புரிவதும் புகைபூவே“ என்ற பாசுரத்தை ஸ்ரீபட்டர் உபந்யஸிக்கும் போது “புரிவதுவும் புகைபூவே“ என்ற சப்த ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம்பற்றி ‘இவ்விடத்தில் அகில்புகையென்றாவது, கருமுகைப்பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும் ஒரு புகையும் ஏதேனுமொருபூவும் எம்பெருமானுக்கு அமையும், செதுயிட்டுப் புகைக்கலாம், கண்ட காலிப்பூவும் சூட்டலாம்‘ என்று உபந்யஸித்தருளினராம், அதை நஞ்சீயர் கேட்டு “ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்“ (கண்டகாலிப்பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது) என்று சாஸ்த்ரம் மறுத்திருக்க, இப்படி அருளிச்செய்த ரஸோக்தி – ‘சாஸ்த்ரம் மறுத்தது மெய்தான், கண்டகாலிப்பூ எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்கவில்லை, அடியார்கள் அப்பூவைப்பறித்தால் கையில் நிஷேதித்ததேயன்றி எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை, என்றாம். திருவாய்மொழிக்குப் பதினெண்ணாயிரமுரைத்த பரகால ஸ்வாமி இந்த ஸம்வாதத்தைக்கொண்டு ரஸியாமல் திரஸ்கரித்துரைத்தது கிடக்க. “***“ (பக்தி எல்லை கடந்தால் நூல்வரம்பில்லை) என்றதையும் அருளிச்செயல் தொடையழகையும் நோக்கி ரஸப் பொருளுரைத்தவற்றில் குதர்க்கவாதஞ்செய்கை விவேகிகட்குப் பணியன்று. பொன்மகரக் காதானை – மகரமென்றது மரக்குழைக்கு ஆகுபெயர்.

English Translation

Worship with flowers the first Lord Narayana, who wears golden Makara earnings. He is the master, the good one. His name alone breaks the cords of rebirths through seven lives, Recliting his name is our only means of release.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்