விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆள்பார்த்து உழிதருவாய்*  கண்டுகொள் என்றும்*  நின் 
  தாள் பார்த்து உழிதருவேன்*  தன்மையை*  கேட்பார்க்கு
  அரும்பொருளாய் நின்ற*  அரங்கனே*  உன்னை 
  விரும்புவதே*  விள்ளேன் மனம்.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தன்மையை - இந்த ஸ்வபாவத்தை
என்றும் - என்றைக்கும் நிலைத்திருக்கும்படியாகக் கடாக்ஷித் தருளவேணும்
உன்னை விரும்புவதே - நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம் - நெஞ்சில்
விள்ளேன் - தவிராதவனாயிருக்கின்றேன்.

விளக்க உரை

எம்பெருமானை நோக்கி “ஆள்பார்த்து உழிதருவாய்!“ என்று விளிக்கிற விளியின் அழகை என் சொல்லுவோம். “***“ என்று வேதாந்தங்கள் எம்பெருமானை நாம் தேடிப் பிடிக்கவேணுமென்று ஓதுகின்றன, அப்படியிருந்தும் எம்பெருமான் நம்மைத் தேடிப் பிடிப்பதற்கு அலைந்து திரிகின்றானென்கிறார் காண்மின். எம்பெருமான் ஸர்வஸ்வாமியென்பதும் சேதநாசே தநங்களடங்கலும் அவனுடைய ஸொத்து என்பதும் தேர்ந்த விஷயம். ஸொத்து தவறிப் போனால் அதனைத் ஸ்வாமியான தன்னுடைய திருவடிகளில் நின்றும் தவறிப்போன தானேயாகையால் இந்த விளி மிகப் பொருந்தும். ஸ்ரீவசநபூஷணத்தில் “ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்குகப்பானுமவனே“ என்றருளிச் செய்த்தும் இதுபோன்ற அருளிச் செயல்களை அடியொற்றியேயாம். ஆள்பார்த்து உழிதருவாய் – “நம்பலையிலே அகப்படுவார் ஆரேனுமுண்டோ“ என்று இதுவே கவலையாக இவ்விபூதியில் வந்து திரிந்துழன்று தேடிக்கொண்டிருப்பவனே! என்கை. இப்போது இது சொல்லுகிற எதுக்காகவென்னில், நீ இப்படி ஆள்தேடிந் திரிகிறவன் ஆகையாலே யாத்ருச்சிகமாக உன்வலையில் சிக்கிக் கொண்ட என்னை விட்டுவிடலாகாது என்கைக்காக. அதனையே “நின்தாள் பார்த்தழிதருவேன் தன்மையை என்று கண்டுகோள்“ என்றதானா லருளிச்செய்கிறார். இப்போது நான் உனது திருவடிகளையே நோக்கிக் கொண்டிருப்பது போலவே என்றைக்கும் இருப்பேனாம்படி கடாக்ஷித்தருளவேணு மென்கை. “உன்னை விரும்புவதே விள்ளேன். மணம்“ என்ற ஈற்றடியையும் ‘கண்டுகோள்‘ என்ற வினைமுற்றோடே கூட்டியுரைத்துக் கொள்ளலாம், அதாவது நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை நெஞ்சில் தவிராதவனாயிருக்கும்படியாக நீயே கடாக்ஷித் தருளவேணும் என்பதாம். இது தாத்பர்ய வ்ருத்தியாகும்.

English Translation

O Lord of Arangam, precious to men of learning! You always roam around looking for your devotees. I too roam around looking for your lotus feet, Pray take note of me. My heart cannot stop loving you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்