விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நன்மணி வண்ணன்ஊர்*  ஆளியும் கோளரியும்* 
  பொன்மணியும்*  முத்தமும் பூமரமும்*  பன்மணி நீ
  ரோடு பொருதுஉருளும்*  கானமும் வானரமும்* 
  வேடும்உடை வேங்கடம். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வானரமும் - குரங்குகளும்
வேடும் - வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை - உடையதான
வேங்கடம் - திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர் - நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்

விளக்க உரை

திருமலையி லெழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடமுடையான் தமக்கு எப்படி உத்தேச்யனோ அப்படியே அவ்விடத்துள ஸகல பதார்த்தங்களும் உத்தேச்யம் என்பது வெளிப்பட இப்பாசுர மருளிச்செய்கிறாரென்க. யாளிகள், சிங்கங்கள், நவரத்னங்கள், புஷ்பவ்ருக்ஷங்கள், நவமணிகளைக் கொழித்துக்கொண்டு வந்து வீழ்கின்ற அருவிகள் பாயப்பெற்ற காடுகள், குரங்குகள், வேடர்கள் ஆகிய இவையெல்லாவற்றையு முடைத்தான திருமலை மணிவண்ணனுடைய திருப்பதி என்கை.

English Translation

The dark gem-hued Lord of venkatam resides in the forest hills with huntes, monkeys, gargoyles, lions and mountain springs that wash gold, pearls and precious stones.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்