விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காணல்உறுகின்றேன்*  கல்அருவி முத்து உதிர* 
  ஓண விழவில் ஒலிஅதிர*  பேணி
  வருவேங்கடவா!* என்உள்ளம் புகுந்தாய்* 
  திருவேங்கடம் அதனைச் சென்று.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கல் அருவி - ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர - முத்துக்கள் உதிரப்பெற்றதாய்,
ஒணம் விழவில் - திருவோணத்திருநாளில்
ஒலி அதிர - (திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு - (பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான

விளக்க உரை

எம்பெருமானே!, நீ திருவேங்கடமலையைவிட்டு என்னுள்ளத்தே குடி கொண்டாயாயினும், நீ இங்குவந்து சேர்வதற்கு ஸாதநமாயிருந்த அந்தத் திருலை தன்னையும் சென்று ஸேவிக்க வேணுமென்று நான் காதல் கொண்டிருக்கின்றே னென்கிறார். “கல்லருவி முத்துதிர“ என்பதும் “ஓணவிழவி லொலியதிர“ கடத்தில் விசேஷணமாக அந்வயிக்கக்கடவன. ‘உதிர‘ ‘அதிர‘ என்பவை வினையைச் சங்களாயினும் பெயரிலே அந்வயிருக்குமென்க, எப்போதும் பேரொலி செய்துகொண்டு வீழ்கின்ற அருவிகளிலே முத்துக்கள் உதிரப்பெற்றதும் (திருவேங்கட முடையானுடைய திருவ்வதார நக்ஷத்திரமான) திருவோணத் திருவிழவில் மங்களா சாஸந த்வநிகள் மிகப்பெற்றதுமான திருவேங்கடம் என்கை. “பேணி வரு“ என்பதும் திருவேங்கடத்திற்கு விசேஷணம், பல திசைகளில் நின்றும் பலர் விரும்பி வந்து பணியப்பெற்ற தென்கை. இப்படிப்பட்ட திருமலையிலெழுந்தருளி யிருக்கும் பிரானே! நீ அத்திருமலையை விட்டு என்னுள்ளம் புகுந்தாய், இனி நீ திருமலையில் இல்லையாயினும் ‘நீ உகந்து வாழ்ந்தவிடம்‘ என்கிற காரணத்தினால் அத்திருமலைதன்னைச் சென்று காணவே நான் விரும்புகின்றேனென்றவாறு. நானோ திருமலையில் வந்து உன்னைக் காண விரும்பியிருக்கின்றேன். நீயோ அங்கு நின்றும் என்னுள்ளத்தே வந்து உறைகின்றாய், இனி நான் என்செய்வேன்! என்கிறாராகவுமாம்.

English Translation

O Adorable Lord of venkatam! You have entered my heart. Mountain springs wash pearls on your hill, I pine to go to there and witness the onam festival of gaity and mirth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்