விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெற்புஎன்று*  வேங்கடம் பாடினேன்*  வீடுஆக்கி 
  நிற்கின்றேன்*  நின்று நினைக்கின்றேன்*  கற்கின்ற
  நூல்வலையில் பட்டிருந்த*  நூலாட்டி கேள்வனார்* 
  கால்வலையில் பட்டிருந்தேன் காண்.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கற்கின்ற - ஓதப்படுகிற
நூல் - வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த - வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார் - லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன் - திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்துநிற்கின்றேன்.

விளக்க உரை

கற்கின்ற நூல்வலையிற்பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையிற் பட்டிருந்தேன் – எம்பெருமான் ஸகலசாஸ்த்ரங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனாதலால் அவனுக்கு ‘நூலாளன்‘ என்று பெயர் இப்பெயர்க்குப் பெண்பால் ‘நூலாட்டி‘ என்பதாம். (பெரிய பிராட்டியாரே! வேதங்களும் வேதாங்கங்களும் எல்லாங்கூடி உமது திருக்கல்யாண குணங்களையே பிரதிபாதிப்பனவாகப் பெரியோர் கூறுவர்) என்று பட்டர் அருளிச்செய்தபடியே எல்லா நூல்களையும் தனக்குப் பிரதிபாதகமாகவுடையவள் என்ற காரணத்தினாலும் ‘நூலாட்டி‘ என்று பெயர் பெறுவள் பிராட்டி, அவளுடைய கேள்வனார் – எம்பெருமான், அவன் எப்படிப்பட்டவனென்றால் கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்தவன், (அதாவது) பரம்பரையாக அஸ்மதாதிகளால் ஓதப்பட்டுவருகின்ற சாஸ்த்ரங்களாகிற வலையிலே பாஹ்யகுத்ருஷ்டிகளால் அசைக்க வொண்ணாதபடி அகப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளாகிய வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கை. மூன்றாமடியில் சாஸ்த்ரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும், ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார், எம்பெருமானை சாஸ்த்ரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே என்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றும் பிரிக்கமுடியாது என்றவாறு, எம்பெருமான் ஒருவலையிலே அகப்பட்டான், நானொருவலையிலே அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி. நான் அஹ்ருதயமாகச் சொன்ன சொல்லையும் அவன் ஸஹ்ருதயமாகக் கொண்டு மடிமாங்காயிட்டு என்னை விஷயீகரித்தருளாகிறானாகையாலே நான் அவனுடைய திருவடிகட்கே அற்றுத் தீர்ந்தே னென்றாராயிற்று.

English Translation

I keep calling to see the Lord of Venkatam, and draw the mystic circle kudat, to see if I may join him. He resides on the hill where mountain streams spill sparking gems that elephants fear and withdraw prey to snakes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்