விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாகத்துஅணைக் குடந்தை*  வெஃகா திருஎவ்வுள்* 
  நாகத்துஅணை அரங்கம் பேர்அன்பில்*  நாகத்து
  அணைப் பாற்கடல் கிடக்கும்*  ஆதி நெடுமால்* 
  அணைப்பார் கருத்தன் ஆவான்.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாகத்து அணை - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை - திருக்குடந்தையிலும்
வெஃகா - திருவெஃகாவிலும்
திரு எவ்வுள் - திருவெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை - சேஷசயனத்தின் மீது

விளக்க உரை

கீழ்பாட்டில் “ஐந்தலைவாய் நாகத்தணை – கிடந்தருளும்“ என்று சேஷசயநம் ப்ரஸ்துதமாகையாலே இங்ஙனே திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சிலவற்றைப் பேசியநுபவிக்கிறார். அன்பருடைய அந்தரங்கத்திலே புகுவதற்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு திவ்யதேசங்களிலே தங்கியிருக்கிறானென்பதும் இதில் அநுஸந்திக்கப்படுகிறது. திருக்குடந்தைத் திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில் நாகத்தணையிலே கிடந்தருள்வது அன்பருடைய ஹ்ருதயத்திலே புகுருகைக்கு அவஸர ப்ரதீக்ஷையாலே யென்கை. வெஃகா – கச்சித்திருப்பதியில் ஸ்ரீயதோக்தகாரிஸந்நிதி. திரு எவ்வுள் – எம்பெருமான் சாலிஹோத்ர மாமுனிவனுக்குப் பிரத்ய க்ஷமாகி ‘வஸிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?‘ என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளூர் என்று திருநாம்மாயிற்றென்பர். “கிம்க்ருஹம்“ என்பது ஸம்ஸ்க்ருதவ்யவஹாரம். பேர் – அப்பக்குடத்தான் ஸந்நிதி. அடிதோறும் ‘நாகத்தணை‘ என்றது போக்யதாசிசயம் தோற்ற. அணைப்பார் கருத்தனாவான் என்று கீதையிற் சொல்லுகிறபடியே எப்போதும் எம்பெருமானோடு அணைந்தேயிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர், அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்தில) பொருந்தினவானாக, ஆவான் – ஆவதற்காக என்றபடி. எம்பெருமானுக்கு, பரமபதம் திருப்பாற்கடல் கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான உகந்தருளின விடங்களில் இருப்பத்திற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும், ஆகவே திவ்யதேசங்களில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில்வாஸமே புருஷார்த்னுக்கு திவ்யதேசவாஸத்தில் ஆதரம் மட்டமாய்விடு மென்றும் ஸ்ரீவசநபூசணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச் செய்ததெல்லாம் இப்பாசுரத்தையும் மூலமாகக் கொண்டதாகும். “கல்லுங்கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்! – வெல்ல, நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்“ என்று நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்த பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.

English Translation

The Lord reclines on a serpent in kudandai, venka and Tiruvallur. The Lord reclines on a serpent in Arangam, Tirupper and Abil. The lord reclines on a serpent in the Ocean of Milk. But the timeless, originless lord easily enters the hearts of his devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்