விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குறிப்பு எனக்குக்*  கோட்டியூர் மேயானைஏத்த* 
  குறிப்பு எனக்கு நன்மை பயக்க*  வெறுப்பனோ
  வேங்கடத்து மேயானை*  மெய்வினைநோய் எய்தாமல்* 
  தான்கடத்தும் தன்மையான் தாள். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எனக்கு குறிப்பு - எனக்கு குதூஹலம்,
மெய் வினை - சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய் - வியாதிகளும்
எய்தாமல் - வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான - தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய

விளக்க உரை

திருக்கோட்டியூர் திருவேங்கடம் முதலான பல திருப்பதிகளிலே எனக்காக வந்து ஸந்நிதிபண்ணி ஸுலபனாயிருக்குமெம்பெருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோவெண்கிறார். திருக்கோட்டியூரிலும் திருமலையலும் சென்று எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடவேண்டுமென்றும் அவனை இடைவிடாது அநுபவித்து ஆத்மாவுக்கு நன்மையை விளைத்துக் கொள்ள வேணுமென்றும் ஆசை கொண்டிருக்கிறேன். எவ்விதமான கருமங்களும் துக்கங்களும் எனக்கு வந்து கிட்டாதபடி செய்து என்னைக் காத்தருள்கின்ற அப்பெருமானுடைய திருவடிகளை நான் எப்படி உபேக்ஷித்திருக்கமுடியும் – என்றாராயிற்று.

English Translation

I priase the lord of Tirukkottiyur, but do I love the Lord of Venkatam any less/ He knows to free me from the clutches of bodily sicknesses and fulfill my desires. His feet are my refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்