விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நிகழ்ந்தாய் பால்பொன்பசுப்புக்*  கார்வண்ணம் நான்கும்* 
  இகழ்ந்தாய்*  இருவரையும் வீய- புகழ்ந்தாய்*
  சினப்போர்ச்சு வேதனைச்*  சேனாபதியாய்* 
  மனப்போர் முடிக்கும் வகை.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நிகழ்ந்தாய் - (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய்
இருவரையும் - மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள்
வீய - தொலையும்படி
இகழ்ந்தாய் - வெறுத்தாய்
சேனாபதி ஆய் - அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு

விளக்க உரை

க்ருதம் முதலிய யுகங்களிலே சேதநர் தமது ஸத்வம் முதலிய குணங்கட்குத் தகுதியாக வெண்மை முதலிய வர்ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிக்ரஹித்து முகங்காட்டுகிறபடியை முதலடியிற் பேசுகிறார். கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காக எம்பெருமான் பால்போன்ற நிறத்தைக் கொள்வன், த்ரேதா யுகத்திலே சிவந்த திருநிறத்தைக் கொள்வன், த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன், கலியுத்தில் எந்த நிறத்தைக் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன் என்க. இவ்வாழ்வார் திருச்சந்த விருத்தத்திலும் “பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம், போலுநீர்மை பொற்புடைத்தடத்துவண்டு விண்டுலாம், நீலநீர்மை யென்றிவை நிறைந்த காலநான்குமாம்“ என்றருளிச் செய்த பாசுரம் காண்க. இருவரையும் வீய இகழ்ந்தாய் – மதுகைடபரென்னும் இரண்டு அஸுரர்களையும் ஒழித்தாய் என்கை. அன்றியே, 1. “கொல்லாமாக்கோல் கொலை செய்து பாரதப்போர், எல்லாச்சேனையு மிருநிலத்து அவித்த வெந்தாய்“ என்கிறபடியே கௌரவர் பாண்டவர் ஆகிற இருவகுப்பிலுமுள்ள சேனைகளையும் தொலைத்தமையைச் சொல்லுகிறதாகவுங் கொள்வர். பாண்டவ பக்ஷத்திலும் ஸேனைகளைத் தொலைத்ததுண்டோவென்று கேட்பர் சிலர், 1. “கொல்லாமாக்கோல்“ என்ற பாசுரத்தின் வியாக்கியானத்திலே – “பாரதஸமரத்திலே துர்வர்க்கமடையத் திரண்டதிறே உபயஸேலையிலும், இங்கே நாலைந்துபேரும் அங்கே ஒன்றிரண்டு பேருமொழிய முடித்துப் போகட்டானாயிற்று.“ என்றருளிச் செய்யப்பட்டுள்ளது காண்க. பஞ்ச பாண்டவர்களையும் அச்வத்தாம, க்ருபாசார்ய, க்ருதவர்மாக்களையும் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் தொலைத்து மண்ணின்பாரம் நீக்கின்னென்க. “உற்றாரையெல்லா முடன்கொன் றரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்“ என்று சொல்லிப் போரொழிந்த அர்ஜுநனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப் போர்புரிய உடன்படுத்தின்னாதலால் புகழ்ந்தாய் சினப்போர்ச்சுவேதனை எனப்பட்டது. சுவேதன் – ச்வேதவாயுநன் என்றபடி. வெள்ளைக் குதிரை பூண்டதேரை வாஹனமாகவுடையன் என்கை. வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்க கொடித் தேர்மிசை முன்பு நின்று“ என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க.

English Translation

O Lord! You appear as white, red, yellow and black respectively during the four Yogas, but heartily disown the Gunas of the Rajas, red, and Tarmas, black, in the war of hatred, you become the General and encouraged the white associated Arjuna of Sattvic temperament to become angry and fight the war.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்