விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வித்தும்இட வேண்டும் கொல்லோ*  விடைஅடர்த்த* 
  பத்தி உழவன்*  பழம்புனத்து*  மொய்த்துஎழுந்த
  கார்மேகம்அன்ன*  கருமால் திருமேனி* 
  நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மொய்த்து எழுந்த - திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன - காளமேகம் போன்ற
கரு மால் - கரிய திருமாலினது
திரு மேனி - திருமேனியை
நீர் வானம் - நீர்கொண்டெழுந்த மேகமானது

விளக்க உரை

ஸ்ரீவைகுண்டத்திலே எம்பெருமான் நித்யர்களோடும் முக்தர்களோடுங் கூடிப் பரிபூர்ணாநுபவம் பெறாநிற்கச் செய்தேயும் அதனால் அப்பெருமான் சிறிதும் மகிழாது, பல பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பானார், தனது ஒருமகன் மாத்திரம் தேசாந்தரத்திலிருக்க மற்ற எல்லாப் புத்திரர்களோடுங் கூடி வாழா நின்றாலும் அதனால் மகிழ்ச்சியடையாமல் தேசந்தரத்திலுள்ள புத்திரனது பிரிவையே நினைத்துப் பரிதபிக்குமாபோலே எம்பெருமானும் ஸம்ஸாரிகளான அஸ்மதாதிகளின் பிரிவையே நினைத்துப் பரிதாபமுற்று நம்மோடே கலந்து பரிமாறுவதறகாகக் கரணகளே பரங்களை நமக்குத் தந்தருளி அவற்றைக்கொண்டு நாம் காரியஞ் செய்யும்படியான சக்தி விசேஷங்களையும் நமக்குக் கொடுத்து, மிகவும் அஹங்காரிகளான நம்மெதிரில் தான் ப்ரத்யக்ஷமாகவந்து நின்றால் நாம் பொறாமைகொண்டு ஆணையிட்டாகிலும் தன்னைத் துரத்திவிடுவோமென்றெண்ணி ஒருவர் கண்ணுக்குந் தோற்றாதபடி, உறங்குகிற குழந்தையைத் தாயானவள் முதுகிலே அணைத்துக்கொண்டு கிடக்குமாபோலே எம்பெருமான்றானும் தானறிந்த ஸம்பந்தமே காரணமாக நம்மை விடமாட்டாமல் அந்தர்யாமியாயிருந்து தொடர்ந்துகொண்டு நம்பை பொருகாலும் கைவிடாமல் ஸத்தையை நோக்கிக் கொண்டு நமக்குத் துணையாய்ப் போருமளவில், நாம் கெட்ட காரியங்களிலே கை வைத்தோமாகில் நம்மைத்திருப்ப மாட்டாமல் அநுமதிபண்ணி உதாஸீநரைப்போலேயிருந்து திருப்புகைக்கு இடம் பார்த்துக்கொண்டேயிருந்து, நாம் செய்கிற தீமைகளில் ஏதேனுமொரு தீமையாவது - விஷயப்ரணனாய் வேசிகளைப் பின்தொடர்ந்து அடிக்கடி கோவில்களிலே நுழைந்து புறப்படுகை, வயலில் பட்டிமேய்ந்த பசுவை அடிப்பதாகத் துரத்திக்கொண்டு போம்போது அது ஒரு கோவிலைப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு ஓடுகிறவளவிலே அதைவிடமாட்டாத ஆக்ரஹத்தாலே தானும் அக்கோவிலை வலஞ்செய்க; (சிசுபாலாதிகளைப்போலே) நிந்தை செய்வதற்காகத் திருநாமங்களைச் சொல்லுகை முதலியன. - நன்மையென்று பேரிடக்கூடியதா யிருக்குமோவென்று பார்த்துவந்து அப்படிப்பட்ட தீமைகளைக் கண்டுபிடித்து “என் ஊரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை ரக்ஷித்தாய், அவர்கள் விடையைத் தீர்த்தாய், அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்“ என்றப்படி சில ஸுக்ருதங்களை ஏறிட்டு மடிமாங்காயிட்டு யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்கிற ஸுக்ருத விசேஷங்களைத் தானே கல்வித்தும் அப்படி கல்வித்தவற்றை ஒன்றை அனேகமாக்கியும் நடத்திக்கொண்டு பொருவன் – என்பது சாஸ்த்ரமுகத்தால் நாம் கண்டறிந்த விஷயம்.

English Translation

The Lord who killed seven bulls is a Bhakti-cultivator; need he sow seeds afresh in a repeatedly cultivated soil? The crop grows fall, seeking the rain-cloud whose hue resembles the lord himself.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்