விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீயே உலகும்எல்லாம்*  நின்அருளே நிற்பனவும்* 
  நீயே*  தவத்தேவ தேவனும்*  நீயே
  எரிசுடரும் மால்வரையும்*  எண்திசையும்*  அண்டத்து 
  இருசுடரும்ஆய இவை   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எண் திசையும் - எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து - ஆகாசத்திலுள்ள
இரு சுடரும் - சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை - ஆகிய இவையெல்லாம்
நீயே - நீயேகாண்.

விளக்க உரை

ஸகலமும் எம்பெருமானாகவே யிருக்கும்படியை யருளிச் செய்கிறாரிதில். “உலகெல்லாம் நீயே“ என்றது – உலகமெல்லாம் உன்னுடைய ஆளுகையில் அடங்கியுள்ளது என்றபடி. நிற்பனவும் நின்னருளே – அவ்வப்பொருள்கள் அழியாதே ஸத்தை பெற்றிருப்பதும் நித்யமாயிருப்பதும் உன்னருளாலே. தவத் தேவ தேவனும் நீயே – எவ்வளவோ தவங்கள் செய்து ப்ரஜாபதி யென்றும் பசுபதியென்றும் பேர்பெற்றிருக்கும் தேவர்கட்கும் தேவன் நீ; யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ என்றவாறு.

English Translation

O Lord! All the Universe is you, the sentient beings, are you. The austerit-god Siva, and his god Brahma to, are you. Fire, the mountains, the eight Quarters, the twin orbs, -all these are you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்