விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தவம்செய்து*  நான்முகனால் பெற்ற வரத்தை* 
  அவம்செய்த*  ஆழியாய்அன்றே*  உவந்துஎம்மைக்
  காப்பாய்நீ*  காப்பதனை ஆவாய்நீ*  வைகுந்தம் 
  ஈப்பாயும்*  எவ்உயிர்க்கும் நீ.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தவம் செய்து - தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால் - பிரமனிடத்து
பெற்ற - (ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை - வரங்களை
அவம் செய்த - பழுதாக்கின

விளக்க உரை

இரணியன் முதலிய ஆஸுரப்க்ருதிகள் பிரமன் முதலிய தேவர்களைக் குறித்து ஸ்வல்பம் ஸ்தோத்ரம் பண்ணிவிட்டால் தலைகால் தெரியாமல் உவந்து எல்லையில்லாதபடி வரங்களை அளித்துவிட்டுப் பிறகு தங்களுக்கே நேரும் அநர்த்தங்களைப் பரிஹரித்துக் கொள்ளமாட்டாமல் கண்ணீர் விழவிட்டுக் கையைப் பிசைந்துக்கொண்டு நிற்பர்கள் அந்த ப்ரஹ்மாதி தேவர்கள். அன்னவர்களது ஆபத்தை அகற்றியருள்வான் எம்பெரான் – என்பதை முன்னடிகளில் அருளிச்செய்து, இப்படிப்பட்ட நீயே எனக்கு எல்லாவபேக்ஷிதங்களையும் தலைக்காட்டித் தந்தருளவேணுமென்கிறார் பின்னடிகளில். “தவஞ்செய்து நான்முகனால் பெற்றவரத்தை“ என்றவிடத்து “இன்னார் பெற்ற வரம்“ என்பது சொல்லப் படவில்லையாயினும், இரணியன் முதலானோர் பெற்ற வரம் எனக்கொள்க. அவர்கள் பெற்ற வரத்தை அவம் செய்கையாவது – நல்ல உபாயங்களினால் அவ்வஸுரர்களைக் களைந்தொழித்தல். வரங்கொடுத்த தாங்களே குடியிருப்பை யிழந்து வருந்தின வளவிலே வரம்பெற்றவர்களையுங் கொன்று வரமளித்தவர்களையும் காத்தருள்பவனிறே ஸ்ரீமந்நாராயணன். இதற்கு ஸாமக்ரி திருவாழியாழ்வானென்க.

English Translation

O Lord who destroys the fruits of penance received from Brahma! You are the protector and the means of protection for your devotees. You are the vaikunta-giver for all souls.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்