விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாழ்த்துக வாய்*  காண்க கண் கேட்க செவி*  மகுடம் 
  தாழ்த்தி வணங்குமின்கள்*  தண்மலரால்*  சூழ்த்த
  துழாய் மன்னுநீள்முடி*  என் தொல்லைமால் தன்னை*
  வழாவண்கை கூப்பி மதித்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மகுடம் தாழ்த்தி - தலையை வணக்கி
தண் மலரால் - குளிர்ந்த புஷ்பங்களைக்கொண்டு
வணங்கு மின்கள் - ஆச்ரயியுங்கள்,
வாய் - (உங்களுடைய) வாய்
வாழ்த்துக - (அவனைத்) துதிக்கட்டும்,

விளக்க உரை

செவி வாய் கண் முதலிய உறுப்புகள்யாவும் பகவத் விஷயத்தில் உபயோகப்படுவதற்கென்றே படைக்கப்பட்டனவாதலால் அவற்றை அவ்விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கோள் என்று பரோபதேசம் பண்ணும் பாசுரம் இது. உங்களுடைய வாயை அவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ஊன்றவையுங்கள், கண்களை அவனுடைய திவ்யமங்க விக்ரஹஸேவையில் ஊன்றவையுங்கள், செவிகளை அவனுடைய புண்ய கீர்த்திகளைக் கேட்பதில் ஊன்றவையுங்கள், தலையை அவனது திருவடிகளில் வணக்குங்கள், கைகளை அஞ்ஜலி செய்வதிலும் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு ஸமர்ப்பிப்பதிலும் உபயோகப்படுத்துங்கள், அவன் எப்படிப்பட்டவனென்றால், “எல்லாரையும் ரகஷிக்கக்கடவேன்“ என்று முடி கவித்துத் தனிமாலை யிட்டிருக்குமவன், என்போல்வாரிடத்தில் நெடுங்காலமாகவே வியாமோஹம்வைத்து ஆட்படுத்திக்கொள்ள அவஸரம் பார்த்திருக்குமவன். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே உங்களுடைய ஸகல கரணங்களையும் உபயோகப்படுத்தி உய்வுபெறுங்கோள் – என்றாராயிற்று. மகுடம் – தலைக்கும் கிரீடத்திற்கும் பெயர்.

English Translation

My Ancient Lord has a tall crown and a wreath of Tualsi over it, Contemplate on him firmly, fold your hands in obeisance of strew fresh flowers. Lower your head at his feet, let your tongue praise him, let your eyes see him, let your ears hear him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்