விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆங்குஆரவாரம் அதுகேட்டு*  அழல்உமிழும் 
  பூங்கார் அரவுஅணையான் பொன்மேனி*  யாம்காண
  வல்லமே அல்லமே?*  மாமலரான் வார்சடையான்* 
  வல்லரே அல்லரே? வாழ்த்து

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொன் மேனி - அழகிய திருமேனியை
யாம் - அநந்யபக்தரான நாம்
வார் சடையான் - நீண்ட ஜடையை யுடையருத்ரனும்
வாழ்த்து - (எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே - அஸமர்த்தர்களே.

விளக்க உரை

இப்பாட்டை இரண்டுவகையாக நிர்வஹிப்பதுண்டு – ஆங்கு என்றது “பரமபதத்திலே“ என்றபடி. அவ்வித்தில் ஆரவாரமாவது – என்று உபநிஷத்திற் கூறியுள்ளபடியே நித்யமுக்தர்கள் பெருமிடறு செய்து ஸாமகாநம் பண்ணுவர்களே அந்த ஆரவாரம். அது திருவனந்தாழ்வானுடைய செவியிற் பட்டவாரே “இது ஸாமகோஷம்“ என்பதை மறந்து அஸுர்ராக்ஷஸர்கள் தீங்கிழைக்க இவ்விபூதியிலும் வந்து கூச்சலிடுகின்றார்கள் போலும் என்று ப்ரேம்மடியாகக் கலங்கி, அவர்கள் எம்பருமானருகில் கிட்டமுடியாதபடி விஷாக்நியை வாந்தி செய்துகொண்டே யிருக்கிறானாம். என்று பட்டர் அருளிச் செய்தபடியே பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற திருவனந்தாழ்வான்மீது சயனித்தருளாநின்ற திவ்யமங்கள விக்ரஹத்தை நாம் ஸேவிக்க முடியாதோ? என்கிறபடியே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்பெற்ற நமக்கு அப்பரமனுடைய திருமேனிஸேவை எளிதேயாம்; பின்னையார்க்கு அரிதென்னில்; இறுமாப்புக் கொண்டிருக்கின்ற தேவதாந்தரங்கட்கே அஃது அரிது. அன்றியே, கீழ்ப்பாட்டில் உலகளந்த வருத்தாந்தம் அர்த்தாத் ப்ரஸ்துதமாகையாலே ஆங்கு என்றது “அவ்வவதார மையத்திலே“ என்றபடியாய், ஆரவாரமது கேட்டு – “திசை வாழியெழ“ என்கிறபடியே திசைகள்தோறு முண்டான மங்களாசாஸந கோலா ஹலத்தைக் கேட்டுத் திருவனந்தாழ்வான்தானும் தன்னாலான ரகைஷயிடவேண்டி அழலை உமழ்ந்தபடியைச் சொல்லிற்றாகவும் நிர்வஹிப்பதுண்டு. ஆகவே முதலடியில் மாத்திரம் இரண்டு வகையான யோஜநாபேதம்.

English Translation

The Lord reclines in the middle of the roaring ocean on a fire-spitting serpent bed. Alas, are we not fit to see his golden frame? Are not siva and Brahma fit to offer praise?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்