விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நான்முகனை*  நாராயணன் படைத்தான்* 
  நான்முகனும் தான்முகமாய்ச்*  சங்கரனைத் தான்படைத்தான்*
  யான்முகமாய் அந்தாதி மேலிட்டு*  அறிவித்தேன் ஆழ்பொருளை* 
  சிந்தாமல் கொள்மின்நீர் தேர்ந்து   (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

படைத்தான் - ஸ்ருஷ்டித்தான்
ஆழ்பொருளை - (ஆகவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீமந்நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான் - அடியேன்
முகம் ஆய் - முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு - இத்திருவந்தாதி மூலமாக

விளக்க உரை

உரை:1

நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – ஸ்ரீமந்நாராயணனால் பிறப்பிக்கப்பட்ட அந்த நான்முகன் தானே தலைவனாய் நின்று ஸம்ஹாரக் கடவுளாகிய சங்கரனைப் படைத்தான். புத்தரின் விநயமற்று வழிகெட நடந்தால் அவனைத் தந்தை விலங்கிட்டு வைப்பது வழக்கம், அதுபோல, எம்பெருமானை ஆராதித்து உய்வு பெறுதற்கென்றே படைக்கப்பட்ட இவ்வுலகம் வழி கெட நடந்து அநர்த்தத்தை விளைத்துக்கொள்ளாமாகில் விலங்கிட்டு வைப்பதுபோன்ற கரணகளேபரவிநாசம் செய்து தீரவேண்டுவதொன்றாதலால் அதற்காகச் சங்கரனைப் படைத்தன்னென்க. சங்கரன் என்றசொல் (‘***.’ என்னும் ஸம்ஸ்க்ருத வ்யுத்பத்தியால்) நன்மை செய்பவன் எனப் பொருள்படும், மேன்மேலும் கேடுகளை விளைத்துக்கொள்ள வொண்ணாதபடி கரணகளே பரங்களை ஒடித்துவைப்பதாகிற ஸம்ஹாரம் நன்மையேயாதலால் இதுதோன்ற இங்கு ‘உருத்திரனை’ என்னாது ‘சங்கரனை’ என்றார். ஆகவிப்படி ஸ்ரீமந்நாராயணனொருவனே உத்பாதகன் (உண்டாக்குபவன்) என்றும், ப்ரஹ்மருத்ராதிகள் உத்பாத்யர்களே (உண்டாக்கப்படுபவர்கள்) என்றும் உண்மைப் பொருளுணர்ந்தால் ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர்த்துப் பிறிதொன்றையும் பரதெய்வமாகக் கொண்டாட வழியில்லை, ஆயினும் இவ்வுலகத்தவர் இவ்வுண்மைப் பொருளுணரப் பெறாமையாலே நசித்துப் போகிறார்கள்; இதனை நாம் கல்வெட்டும் செப்புவெட்டும் போலே பிரபந்தப்படுத்திப் பகர்வோமாயின் பலரும் தெளியலாகுமென்று திருவுள்ளம்பற்றி, ‘இவ்வாழ்பொருளைத் திருவந்தாதிப் பிரபந்த முகத்தால் உங்கட்கு அறிவிக்கின்றேன், ஸம்ஸாரத்தின் பொல்லாங்கையும் நான் சொல்லுகிற அர்த்தத்தின் அருமை பெருமைகளையும் ஆராய்ந்து, இவை நெஞ்சில் நின்றும் நழுவி மங்கிப் போகாதபடியாக உள்ளத்தே தேக்கிக்கொள்ளுங்கள்’ என்று துடைதட்டி யுணர்த்துகிறார் பின்னடிகளில். இவ்வாழ்வார் ஆழ்பொருளை அறிவிக்கத் தொடங்கும்போதே “அறிவித்தேனாழ்பொருளை“ என்று இறந்தகாலத்தாற் கூறினது – தம்மைக்கொண்டு அறிவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யஸங்கல்பனாகையாலும், எம்பெருமானுடைய பரத்துவத்தைப்பற்றிப் பாசுரங்கள் பேசித் தலைக்கட்டியே தீரும்படியான தம் உறுதியினாலும் இப்பிரபந்தம் தலைக்கட்டியாய்விட்டதாக நினைத்தென்க. இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி என்பர்.

உரை:2

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய் சங்கரனை படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேல்இட்டு அறிவித்தேன் அழ்பொருளை சிந்தாமல் கொண்மினீர்.

English Translation

Narayana created the four-faced Brahma. Brahma created siva from himself. I dole out this deep truth through my Andadi song. Take it without spilling.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்