- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
க்ருஷ்ணாவதாரத்தில் தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்டு மிகப்பெரிய குதிரைவடிவங் கொண்டு வந்த கேசி யென்னு மஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நாகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார். முன்னடிகளிரண்டும் அவ்வசுரக் குதிரைக்கு அடைமொழி. பருமனில் மலையைவென்றிருந்த்தாம், உய்த்தியில் ஆகாயத்தை அதிக்ரமித் திருத்ததாம், லோகத்தில் (அல்லது வலிமையில்) வாயுவை வென்றிருந்ததாம். ‘மலை‘ என்று பொதுவாகச் சொன்னால் போராதோ, ‘இமஞ் சூழ்மலை‘ என்று விசேஷித்துச் சொல்லுவானேன்? என்னில், ஸப்தகுலபர்வதங்களில் இமயமலை முதலிற் கண்கிடப் பட்டிருப்பதால் இதனை உபலக்ஷணமாகக் கொண்டு குலாசலங்களேழையுங் கொள்ளவேணு மென்பதற்காக வென்க. அமஞ்சூழ்ந்து – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படாக, எனவே இவைற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம். துரகம் – வடசொல், வேகமாகச் செல்வது என்று காரணக் குறி.
English Translation
He who protected the mountains, the skies, the winds and all else within himself will surely protect us from the travels all hell. He killed the horse kesin with his bare hands.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்