விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கலந்து மணிஇமைக்கும் கண்ணா,*  நின் மேனி
  மலர்ந்து*  மரகதமே காட்டும்,* - நலம்திகழும்
  கொந்தின்வாய் வண்டுஅறையும்*  தண்துழாய்க் கோமானை,*
  அந்திவான் காட்டும் அது.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மணி கலந்து - மணியோடுகூடி
இமைக்கும் - விளங்காநின்ற
கண்ணா - கண்ணபிரானே!
மாதகம் - மரதகரத்னமானது
மலர்ந்து - ஒளிப்பரப்பை யுடைத்தாய்க் கொண்டு

விளக்க உரை

இப்பாட்டும் உபமாநமுகத்தால் அநுபவிப்பதாம். குருமாமணிப் பூண்குலாவித்திகழுந் திருமார்பையுடைய பெருமானே! மரகதப் பச்சையானது உனது பச்சைமாமலை போன்றமேனியைக் கோட்சொல்லித தருகின்றது, பசுகுபசுகென்ற திருத்துழாய்மாலை யணிந்திருக்குமழகை ஸந்த்யாராக ரஞ்ஜிதமான ஆகாசம் காட்டுகின்றது என்கிறார். திருத்துழாயின் பசுமயும் “கைவண்ணந் தாமரை வாய் கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே“ என்னும்படியான திவ்யாவயவங்களிற் சிவப்புமான பரபாக சேரபையை அந்திவான் காட்டுமென்றபடி. கோமானை –முன்னிலையில்வந்த படர்க்கை. ஓரடைவிலே இப்பாசுரத்தை அழகிய மணவாளச்சீயர் உபந்ய ஸித்தருளுமளவில், இதற்கு இங்ஙனேயும் பொருள் சொல்லலாமென்று அருளிச்செய்தபடி, கண்ணா! நின்மேனியை மரதகமே மலர்ந்துகாட்டும், கலந்து மணியிமைக்குத் தண்டுழாய்க் கோமானான வுன்னை அந்திவான் காட்டும் என்று யோஜித்து, பச்சைமாமலைபோல் மேனியானது ஸமுதாயரூபேண மரதகப் பச்சைபோல் விளங்காநின்றது, அதற்குமேல் திருவாபரண ரத்நப்ரபையும் திருத்துழாய் சோபையுமான அழகை உற்று நோக்குங்கால் அந்திவான் போன்றிருக்கின்றது என்று வடமொழியிளாரின் நியாயம் தென்மொழியிலு முண்டாதலால், முதலடியிலுள்ள “கலந்து மணி யிமைக்கும் என்றதை மேலே அந்வித்தல் சாலும்.

English Translation

The evening sky, -O Lord!, -brings to mind your dark frame lit by the red koustabha gem on your chest. The bee-humming Tulasi garland on your chest makes your frame glow like a green emerald of excellence.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்