விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உளனாய*  நான்மறையின் உட்பொருளை,*  உள்ளத்து-
  உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்,* - உளனாய
  வண்தாமரை நெடுங்கண்*  மாயவனை யாவரே,*
  கண்டார் உகப்பர் கவி?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நால் மறையின் - நான்கு வேதங்களினுடைய
உள் பொருள் - உள்ளுறை பொருளாக
உளனாயவனை - இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து - (ஜ்ஞாநயோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக - நெஞ்சிலே பொருந்தியிருப்பவனாக

விளக்க உரை

வேதங்களினால் அறியக்கூடியவனான எம்பெருமான் என்னெஞ்சிலுள்ளான் என்னெஞ்சிலுள்ளான் என்று ஒவ்வொரு வரும் சொல்லிக் கொண்டிருக்கலாமத்தனை யன்றி அப்புண்டரீகாக்ஷனை நேரே கண்ணாற் கண்டவர் யார்? யாருமில்லை. அப்படியானால் எத்தனையோ பக்தர்கள் ‘கண்டேனே, கண்டேனே‘ என்று சொல்லக் காண்கிறோமே, அஃது என்ன? என்று கேட்கில் உவப்பினால் கவி சொல்லி விடுகிறார்களித்தனை யல்லது வேறில்லை – என்கிறார். எம்பெருமானைக் கண்டேனென்று சொல்லிக் கொண்டால் அதனால் தங்களுக்கொரு ஸ்ந்தோஷம் விளைகிறபடியால் கண்டேன் கண்டேனென்று பலரும் கவிப்பாக்கள் கூறுகின்றவளவால் பரம்பொருளை மெய்யே கண்டாரகளல்லர் என்றவாறு. முதலடியில் “உட்பொருளை“ என்ற விடத்துள்ள இரண்டாம் வேற்றுமை யுருபைப்பிரித்து ‘உளனாய‘ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. மேலிடத்தும் இங்ஙனமே.

English Translation

The inner meaning of the Vedas contains the experience of the divine. Even if he resides in the hearts of all, those who have realised the lotus-eyed wonder-Lord are few. They excel in poetry.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்