- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் “ஓதுகதிமாயனையே யோரத்து“ என்றாரோ, இஃது எப்படி கூடும்? நமது பஞ்சேந்திரியங்களும் சப்தாதி விஷய க்ராமங்களிலே சென்றுகொண்டிருக்கையாலே நாம் மேன்மேலும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறக்க வழி தேடுமவர்களாயிருக்கின்றோமேயன்றி உஜ்ஜீவிக்கும் வழி தேடுமவர்களாயிருக்கின்றிலோமோ‘ என்ன, தோளிணைமேலும், நன் மார்பின் மேலும், சுடர்முடிமேலும், தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுயம்மானது திருமேனியின் போக்யத்தையிலும் அலங்காரங்களின் அழகிலும் நாம் நெஞ்சைச் செலுத்துவோமாயின் நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷணாநுபவத்திலே ஊன்றி சப்தாதி விஷயங்களின் வழிச்செல்லாமல் ஸம்ஸாரத்தை யடியறுப்பதற்குப் பாங்காகும் என்கிறார்.
English Translation
The graceful lord of deep-ocean-hue wears the fragrant krishna-Tulasi and many rows of necklaces and jewles, Through firmness of heart and subdued senses, If we contemplate and serve, we will be freed of the Karmas of seven lives.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்