விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நலமே வலிதுகொல்*  நஞ்சுஊட்டு வன்பேய்,* 
  நிலமே புரண்டுபோய் வீழ,* - சலமேதான்
  வெம்கொங்கை உண்டானை*  மீட்டுஆய்ச்சி ஊட்டுவான்,* 
  தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சலமே - கபடமாகவே
நஞ்சு - விஷத்தை
ஊட்டு - உண்பிக்க வந்த
வன் பேய் - கொடிய பூதனையானவன்
நிலமே -  பூமியிலே

விளக்க உரை

எம்பெருமானிடத்தில் அந்தரங்கமான அன்பு பூண்டவர்களுள் தலையானவன் யசோதைப் பிராட்டி யொருத்திதான் என்பதை வெளியிடுகிறாரிதில், கண்ணபிரான் இளங்குழவியாய் நந்தகோபர் திருமாளிகையில் சயனித்திருக்கும்போது வஞ்சகக் கஞ்சனா லேவப்பட்டுக் கொல்லவந்த பூதனையென்னும் பேய்த்தாய் மிக்க பரிவுள்ளவள்போலத் தெய்வக்குழவியை யெடுத்துத் தனது விஷந்தடவின முலையைக்கொடுக்க, பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்டவாறே அப்பேய்ச்சி உயர்மாண்டு பிணமாய் விழுந்தாள், உடனே யசோதைப்பிராட்டி ஓடிவந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முலை கொடுத்தாள் – என்பதாக இதிஹாஸமுள்ளது, ஒருத்திவந்து முலைகொடுத்துப் பட்டபாடு கண்ணெதிரே காணாநிற்கச் செய்தே இன்னொருத்தி கிட்டவரத்தான் முடியுமா? அஞ்சாமல் கிட்டவந்து வாரியெடுத்து முலை கொடுத்தாளென்றால் இவளுடைய அன்பின் கனம் விளங்குமன்றோ பூதனைகொடுத்த விஷத்திற்கு மாற்றான அம்ருதமாகத் தனது ஸ்தந்யத்தைக் கொடுக்க வேணுமென்னும் அன்பு மிகுதியினால் யசோதை செய்த இக்காரியம் அன்புக்கு ஒக்குமத்தனை. நலமே வலிதுகொல் – ஸ்த்ரீகளுக்கு அச்சமே வலிதாயிருக்கச் செய்தேயும் யசோதைப்பிராட்டிக்கு அன்புதான் வலிது போலிருக்கின்றது! என்றவாறு.

English Translation

The Lord placed his lips on the poisoned breast of the ogress and sucked till she withed in pain and fell on the floor. Then the cowherd-dame Yasoda lifted him with concern and gave him her breast to suck. See love is strong!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்