- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
என்றுஞ் சொல்லுகிறபடியே எம்பெருமானுக்கு ஸூர்யமண்டலமும் ஒரு வாஸஸ்தாநமாதலால் ‘இரவித் தேரோட்டி‘ என்றார். எம்பெருமானுடைய அநுப்ரவேசமின்றி எந்த தேவதையும் எக்காரியமும் செய்ய முடியாதாகையாலே அவன்தானே ஸூர்யனுக்கு அந்தர்யாமியாயிருந்து தேரே நடத்துகின்றானென்க. ஏழ் பூண்ட –ஏழு குதிரைகளைப் பூண்ட என்றபடி. காயத்ரீ ப்ருஹதீ, உ ஷ்ணிக், ஜகதீ. த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி – என்கிற ஏழு சந்தஸ்ஸுக்களும் ஏழு குதிரைகளாயக் கொண்டு வஹிக்குமென்று சாஸத்ரம் சொல்லும். ‘ஓட்டி‘ என்பதை வினையெச்சமாகவுங் கொள்ளலாம், ‘இ‘ விகுதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம். “குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன்... பரன்சென்று சேர் திருவேங்கடமாமலை“ என்று கண்ணபிரான்தானே திருவேங்கடமலையில் வந்து ஸந்நிதி பண்ணிருப்பதாக அருளிச் செய்கையாலே இங்கும் “குடநயந்த கூத்தனாய் நின்றான்“ என்று கண்ணபிரானோடு ஒற்றுமை நயம்படக் கூறப்பட்டது.
English Translation
Venkatam is the abode of the lord who danced with pots merrily. He drives the chariot of the Sun from East to west and stays in the North. Praising him is the only purpose for these lips.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்