விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆங்கு மலரும்*  குவியுமால் உந்திவாய்,* 
  ஓங்கு கமலத்தின் ஒண்போது,* - ஆம்கைத்
  திகிரி சுடர்என்றும்*  வெண்சங்கம்,*  வானில் 
  பகரும்மதி என்றும் பார்த்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மால் - ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய் - திருநாபியிலே
ஓங்கு - உயரவளர்ந்த
ஒண் கமலத்தின் போது - அழகிய தாமரைப் பூவானது
கை - அவனுடைய வலத்திருக்கையில்

விளக்க உரை

சேஷசயனத்தில் பள்ளிகொள்ளு மெம்பிரானுடைய திருநாபிக்கமலம் நன்றாக விகஸித்ததாகவுமிராதே நன்றாக மூடிக்கொண்டதாகவுமிராதே மலர்வதும் மொட்டிப்பதுமா யிருக்கிற அழகை அநுபவித்துப் பேசுகிறார். எம்பெருமானுடைய வலத் திருக்கையில் திருவாழியாழ்வான் விளங்குகிறான், “***“ என்று அனேகமாயிரம் ஸூர்யர்களுக்கு ஸமானமாக ஸுதர்சநாழ்வான் சொல்லப்பட்டிருப்பதால் அவ்வாழ்வானைக் கண்டு ஸூர்யனென்றெண்ணி உந்திக்கமலம் மலரத் தொடங்குகின்றது, இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வான் வெள்ளை வெளே லென்று விளங்குகிறான், 1 “சந்திரமண்டலம் போல் தாமோதரன் கையில்.... வலம் புரியே!“ என்று அவன் சந்த்ரஸமாநனாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவ்வாழ்வானைக்கண்டு சந்திரனென்றெண்ணி மூடிக்கொள்ளத் தொடங்குகிறது. இப்படி மாறி மாறி மலர்வதும் மூடுவதுமாயிருக்குமிருப்பொழிய ஸ்திரமான வொரு நிலையில்லை யென்கிறார்.

English Translation

There on the Lord's navel grows a stalk with a lotus on it, which opens and closes like they always do when they see the Sun and Moon. But here it is the radiant discus and the white conch of the lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்