விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அங்கற்கு இடர்இன்றி*  அந்திப் பொழுதத்து,* 
  மங்க இரணியனது ஆகத்தை,* - பொங்கி
  அரிஉருவமாய்ப் பிளந்த*  அம்மான் அவனே,* 
  கரிஉருவம் கொம்புஒசித்தான் காய்ந்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அங்கற்கு - பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு
இடர் இன்றி - ஒருதுன்பமும் வராதபடி
அந்தி பொழுத்தது - ஸாயங்காலத்தில்
இரணியனது - ஹரண்யனுடைய
ஆகத்தை - மார்வை

விளக்க உரை

அங்கற்கு இடரின்றி – வடமொழியில், மகனை ‘ஆத்மஜன்‘ என்று சொல்வதுபோலத் தமிழில் அங்கன் என்கிறது. அங்கத்திலிருந்து தோன்றினவன் என்று பொருள், எனவே ஹிரண்யபுத்ரனான ப்ரஹ்லாதாழ்வானைச் சொல்லிற்றாயிற்று. அவனுடைய இடர்தீர்வதற்காக அரியுருவமானான் என்கையாலே, எம்பெருமான் தன் திறத்திலே ஆஸுரப்ரக்ருதிகள் எத்தனை அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறமாட்டான், தன்னடிவர் பக்கல் அபசாரப்படுமளவில் அவ்வபாதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் என்கிற அர்த்தம் வெளியாகிறது. “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயர் அருளிச்செய்வர்“ என்று ஸ்ரீவசநபூஷணத்தில் ஸ்ரீஸூக்தி. அதாவது – ஸங்கல்ப மாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னையழியமாறி இதர ஸஜாதீயனாயவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்யராவணாதி நிரஸநரூபமான அதிமாநுஷ க்ருத்யங்களெல்லாம – ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே யென்று நஞ்சீய ரருளிச்செய்வாராம். அஸுர ராக்ஷஸர்களாலே தனக்கு நேரும் இடர்களைக் கணிசிக்கமாட்டான் எம்பெருமான், அடியார்க்கு ஓரிடர் நேர்ந்தால் அதனை உடனே பரிஹரிக்கப் பாடுபடுவன் என்க, இது தோன்றவே இங்கு ‘அங்குகற்கு இடரின்றி‘ எனப்பட்டது. (இடரின்றி – இடரில்லாமலிருக்கும் பொருட்டு) ஈற்றடியில், “கரியின் கொம்பொசித்தான்“ என்றாலே போதுமே, ‘கரியுருவம்‘ என்றதென்? என்னில், மேலெழப்பார்வைக்கு அனு யானையாயிருந்த தத்தனை, உண்மையில் அஸுரவடிவேயாம் அது – என்ற கருத்தை வெளியிடுதற்கென்க. உருவத்தினால் கரியாயிருந்த (யானையாயிருந்த) விலங்கின்கொம்பை முறித்தவன் என்றபடி. கரீ – வடசொல், துதிக்கை யுடையதென்று காரணக்குறி. இனி, கரியென்றதைத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம், (பதவுரை காண்க)

English Translation

The godly son Prahiada's protector was a man-lion who appeared at dusk and tore apart Hiranya's mighty chest. He is the same Lord who pulled out the tusk of an angry elephant and destroyed it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்