விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அன்று இவ்உலகம்*  அளந்த அசைவேகொல்,*
  நின்றுஇருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* - அன்று
  கிடந்தானை*  கேடுஇல்சீரானை,*  முன் கஞ்சைக்
  கடந்தானை*  நெஞ்சமே! காண்.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இவ்வுலகம் - இவ்வுலகங்களையெல்லாம்
அளந்த - அளந்ததனாலுண்டான
அசவே கொல் - சிரமத்தினாலேயோ
வேளுங்கை - திருவேளுக்கையிலே
இருந்து - வீற்றிருந்து

விளக்க உரை

திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான் ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார். “நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில்கூட்டி உரைக்கப்பட்டது. நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம். அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம். “கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.

English Translation

Did your feet, -that stretched into the sky, -grow fired? O Heart! See, the Lord is sitting in Velukkai, and reclining in Venkai Contemplate him. He is the kamsa-killer lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்