- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுடைய திருவடிகளிலேயே தம்முடைய திருவுள்ளம் வியாமோஹய்கொண்டிருக்கும்படியை அருளிச்செய்கிறார். அப்பெருமான் எப்படிப்பட்டவன்? அஞ்சிறைய சுரும்பு வண்தார் துளையில் சென்று ஊத அரும்பும் புனந்துழாய்மாலையான் – அவன், திருவடி திருமார்பு திருத்தோள் திருமுடி முதலானவிடங்களில் திருத்துழாய்மாலைகள் அணிந்துகொண்டிருக்கிறான், அவற்றில் வண்டுகள் படிந்து ரஸநாடிகளைக் கண்டுபிடித்து, அங்கு ஊதுகின்றன, அதனால் அந்த மாலைகள் அரும்புகின்றனவாம், திருத்துழாய் தன்னிலத்தில் இருந்தால் எப்படி அரும்புமோ அப்படி தனது திருமேனியிலும் அரும்பப்பெற்றவன் எம்பெருமான் என்று திருமேனிவளம் சொல்லிற்றாயிற்று. முதலடியின் முடிவிலுள்ள வண்டார் என்பதை ‘வண் தார்‘ என்று பிரிக்க ‘வண்டு ஆர்‘ என்றும் பிரிப்பர், அப்போது, வண்டு ஆர் – பெண் வண்டுகளோடு கூடின கரும்பு – ஆண்வண்டுகள் என்று பொருள் கொள்க. ஈற்றடியில் துழாய் –துழாவி என்றபடி “கடலும் மலையும் விசும்புந் துழாய்“ என்ற (2-1-4) திருவாய்மொழிப் பிரயோகமுங்காண்க.
English Translation
He wears cool Tulasi garlands that buzz with male and female bees inside the flowes. His golden feet strode the Earth and sky. The heart will soon learn to hover around his adorable feet.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்