விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேசுவார்*  எவ்வளவு பேசுவர்,*  அவ்வளவே 
  வாச மலர்த்துழாய் மாலையான்,* - தேசுஉடைய
  சக்கரத்தான்*  சங்கினான் சார்ங்கத்தான்,*  பொங்குஅரவ
  வக்கரனைக் கொன்றான் வடிவு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேச உடைய சக்கரத்தான் - தேஜ்ஸ்ஸையுடைய திருவாழியை ஏந்தினவனும்
சங்கினான் - ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
சார்ங்கத்தான் - சார்ங்கவில்லையுடையவனும்
பேசுவர் - பேசுகின்றார்களோ
அவ்வளவே - அவ்வளவேயாம்.

விளக்க உரை

‘எம்பெருமானுடைய பெருமைகளைப் பேசுவதற்கு மாஞானிகளால்தான் ஆகும், மற்ற அற்பஞானிகளால் ஆகாது‘ என்பதில்லை, வாய்திறந்து நான்கு சொற்களைத் தொடுத்து பேச வல்லவர்கள் எவராயிருந்தாலும் எம்பெருமான பெருமையைப் பேசலாம். ஆனால், நிரம்பிய ஞானமுடையார் பேசினாலன்றோ அவன் பெருமை உள்ளவளவும் பேசினதாக ஆகும், அற்ப ஞானிகள் பேசினால் ஒரு திவலையளவும் ஆகமாட்டாதே என்னில், அப்படியில்லை, ஆயிரம் வாய்படைத்த ஒன்றான திருவனந்தாழ்வான்தானே பேசினாலும் எம்பெருமான் பெருமை முழுதும் பேசினதாக ஆகப்போகிறதில்லை யார் பேசினாலும் அவனுடைய பெருமைக்கடலிலே ஒரு திவலைமாத்திரமே பேசினதாக ஆகும். ஆகவே பேச வாய்ப்படைந்தவர்களெல்லாரும் பேசலாம். எம்பெருமானுடைய வைபவம் எப்படிப்பட்டதென்றால், ஒருவன் சுருக்கமாகப் பத்துவார்த்தை சொன்னாலும் அதற்குள்ளே அவன் பெருமை அடங்கி விட்டது என்னும் படியாயிருக்கும். மற்றொருவன் ஒரு மஹாபாரதமாகப் பன்னியுரைத்தாலும் அதற்குள்ளும் அவன் பெருமை அடங்கிவிட்டது. என்னும்படியாகவேயிருக்கும் – என்று இக்கருத்தையடக்கு இப்பாசுரமருளிசெய்கிறார். பேசுவார் எவ்வளவு பேசுவர் – (இது கேள்வியன்று) பேசுகிறவர்கள் மிக்க சுருக்கமாகவோ மிக்க விரிவாகவோ நடுத்தரமானவெ எந்த அளவில் எம்பெருமான் வடிவைப் பேசுகிறார்கள், (அவ்வளவே வடிவு) அது அவ்வளவாகவேயிருக்கும். எல்லைக்கண்டு பேசுதல் யார்க்கும் முடியாதென்கை. திருவரங்கத்தமுதனால் எம்பெருமானைப்பற்றிச் சொல்லும்போது “பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்கு உரிய சொல் என்று முடையவன்“ என்று பணிந்த பாசுரம் இருந்த்தே.

English Translation

Speaking of the fragrant Tulasi garland Lord, who wields the sharp discus, conch, Sarnga bow, and the mace that killed the nosy Dantavakra, Can anyone exhaust his glories?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்