- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“அறிவென்னுந்தான் கொளுவி“ என்கிறபாட்டில் –இந்திரியங்களைப் பட்டிமேய வொண்ணாதபடி அடக்கி நின்று சாஸ்த்ரங்களை அப்யஸித்தால் எம்பெருமான் படிகளைக் காணலாமென்றார். இது எளிதில் கைகூடாத காரியமாயிற்றே! என்று சிலர் நினைக்ககூடுமே, அவர்களுக்குச் சொல்லுகிறார். நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் திருவேங்கடமலையிலே வந்து நின்று தேவர்கள் வணங்க நிற்கிற நிலையிலே ஆச்ரயித்து அப்பெருமானிடத்திலேயே நெஞ்சை ஊன்றவைத்தால், சிற்றின்பங்களிலே விருப்பம் ஒழிந்து, எம்பெருமான்படிகளை யுணர்த்துகின்ற சாஸ்த்ரங்களிலே நெஞ்சைச் செலுத்துவதற்கு அநுகூலமாகும் என்கிறார். “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு“ என்ற விதில் சிலர் சொல்லுவதொன்றுண்டு, அதாவது சிற்றின்பங்களில் பற்று அற்றாலன்றி பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறவாது, பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறந்தாலன்றிச் சிற்றின்பங்களில் பற்று அறாது என்று அந்யோந்யாச்ரய தோஷம் சொல்லலாம்படி யிருக்கையாலே ‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு‘ என்று எங்ஙனே சொல்லலாம்? என்று. இதற்குப் பெரியோர் பணிப்பதாவது – நாம் சிற்றின்பங்களை விரும்பி வேசி முதலானவர்களைக் காண்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பலகாலும் பகவத் ஸந்நிதிகளுக்குச் செல்லுகிறோம், அப்போது யாத்ருச்சிகமாக எம்பெருமான் திருமேனியிலும் கண் செலுத்த நெருகின்றது, இப்படி பலகால் நேர்ந்தால், ஒருகால் ஸுக்ருதவிசேஷத்தினால் அப்பெருமானிடத்திலேயே நம்மனம் லயித்து ‘என்னமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே‘ என்னும்படியாக ஆகி, சிற்றின்பங்களில் வெறுப்புபிறந்து விடுகின்றனது. ஆகவே ‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கை விட்டு‘ என்றது பொருந்தும், அந்யோந்யாச்ரயதோஷமில்லை. சிற்றின்பங்களில் பற்று அற்றால் தான் பகவத் விஷயத்தில் மனம் சுழிக்கும்மென்று நியதிகூறவேண்டா – என்பர்.
English Translation
This will become easy to understand if you give up the embrace of dames, and study the revelatory texts. Set your heart on the Lord. He is the four vedas, the resident of venkatam; his feet are worshipped by celestials, Bow to him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்