விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அறிவுஎன்னும் தாள்கொளுவி*  ஐம்புலனும் தம்மில்,*
  செறிவுஎன்னும் திண்கதவம் செம்மி,* - மறைஎன்றும்
  நன்குஓதி*  நன்குஉணர்வார் காண்பரே,*  நாள்தோறும்
  பைங்கோத வண்ணன் படி.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அறிவு என்னும் - ஜ்ஞாநமாகிற
தாள் கொளுவி - தாழ்ப்பாளையிட்டு
ஐம்புலனும் - பஞ்சேந்திரயங்களையும்
தம்மில் செறிவு என்னும் - (வெளிச்சொல்லாமல்) உள்ளே அடக்கிவைப்பதாகிற.
திண் கதவம் செம்மி - திடமான கதவையடைத்து

விளக்க உரை

எம்பெருமான் ஒருவராலும் அறியக்கூடாதவன் என்றால், ‘ஆகாசத்தாமரை, மலடிபிள்ளை முதலானவைபோல் பரப்ரஹ்மமும் அடியோடு இல்லாத வஸ்து‘ என்றதாய்விடுமே என்று சிலர் சங்கிக்க, அப்படி அடியோடு அறியக்கூடாதவனால்லன் எம்பெருமான், நாம சொல்லுகிற வழியாலே அறிவார்க்கு அறியலாம் என்கிறாரிதில். வேதங்களை ஓதியுணர்ந்து அவற்றின் பொருள்களையும் நன்குணர்ந்து, வெளிவிஷயங்களில் இந்திரியங்களைப் போகவொட்டாமல் தடுத்து அவனைக் காணப்புகுந்தால் காணலாம். நல்ல ஞானம் பெற்றவர்களுடைய இந்திரியங்கள் பட்டிமேயமாட்டாவாகையால் அறிவைத் தாழ்ப்பாளாக உருவகப்படுத்தினர். பசுமை + ஓதம் – பைங்கோதம். நன்னூலில் பண்புப் பகுதியின் விகாரங்களை யுணர்த்துகின்ற “ஈறுபோதல்“ என்னுஞ் சூத்திரத்தில் “இனமிகல் இனையவும் பண்பிற்கியல்பே“ என்றது நோக்குக. வேறுவழிகளு முண்டு. ‘வை இங்கு ஓதம்‘ பைங் கோதம் ‘இங்கு‘ என்றது – தங்குகின்ற என்றபடி. பசுமைதங்கிய ஓதமென்கை. சந்தியில் இகரம் கெட்டது.

English Translation

What is subtle knowledge? Close the doors of the senses and apply on them the locks of discrimination. Then study the revelatory works repeatedly, and try to understand their meaning. Gradually the ocean-hued Lord will reveal himself, through Yoga.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்