விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கோதைவேல் ஐவர்க்குஆய்*  மண்அகலம் கூறுஇடுவான்,* 
  தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் காண்ஏடீ,*
  தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் ஆகிலும்,* 
  ஓதநீர் வையகம்*  முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மண் அகலம் கூறு இடுவான் – குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக
தூதன் ஆய் – தூதுசென்றவனாய்
மன்னவனால் – துரியோதனனென்னும் அரசனாயல்
சொல் உண்டான் காண் – இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ?
சாழலே – தோழீ!

விளக்க உரை

தோழீ! நீ உகக்கும் பெருமான் எல்லார்க்கும் மேம்பட்டவனாகவன்றோ இருக்கவேண்டும்? அவன் அப்படி யிருந்தானாகில் பிறர்க்கு இழிதொழில்செய்து திஜீவனோ பஞ்சபாண்டவர்களுக்கு அரசுரிமை பெறுவித்தற்பொருட்டுப் ‘பரண்டவதூதன்’ என்று பெயர்சுமந்து துரியோதனாதிகளிடத்தில் தூது நடந்தான்; அங்ஙனே நடந்தவிடத்திலே அந்தத் துரியோதனனால் இழிவான வார்த்தைகளைச் சொல்லப்பெற்றான்; இவனையோ நீ பரமபுருஷனென்று கொண்டாடுவது? என்ன் அதற்கு மறுமொழி கூறுகின்றாள் மற்றொருத்தி; - பாண்டவாக்ட்குத் தூது நடந்ததும் மன்னவனால் சொல்லுண்டதும் மெய்யே; இவற்றையேயோ நீ பார்ப்பது; கடல்சூழ்ந்த வுலகங்களையெல்லாம் முன்பு பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றினுள் வைத்துப் பிறகு வெளிப்படுத்தினவன் இவனே என்கிற பெருமையை அறிந்திலைபோலுமென்கிறாள். கோதை=அரசர்க்கு லக்ஷணமான பூமாலையைச் சொன்னபடி; அரசுரிமையை இழந்திருந்த பாண்டவர்கட்கு அப்பேவாது பூமாலையில்லையாகிலும் அதனை அணிவதற்குரிய ஸ்வரூப யோக்யதையைக் கொண்டு இங்கு இவ்விசேஷணமிட்டபடி.

English Translation

"Aho, Sister! For the sake the five Pandava princes he went as a messenger seeking a stretch of land, and ate words of abuse from the king Duryodhana, See!". "But though he ate, words of abuse from the king, he also swallowed the ocean-girdled world and brought if out during the deluge, so tally!".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்