விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெற்றாரார்*  ஆயிரம் பேரானைப்,*  பேர்பாடப்-
  பெற்றான்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
  கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்*  இவைகேட்கல்-
  உற்றார்க்கு,*  உறுதுயர் இல்லை உலகத்தே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாடப் பெற்றாள் – பாடப்பெற்றவரான
கலியன் – ஆழ்வார்
ஒலிசெய் – அருளிச்செய்த
தமிழ் மாலை – தமிழ்ச் சொல்மாலையாகிய திருமொழியை
கற்றார் – கற்பவர்கள்

விளக்க உரை

பேருமாயிரம் பேசநின்ற பெருமானுடைய திருநாமங்களையே பாடிப் போதுபோக்கும்படியான பாக்கியமுடையரான ஆழ்வார் அருளிச்செய்த இத்திருமொழியை அதிகரிப்பவாக்ள் இவர் தம்மைப்போலவே ஆயிரம்பேரானைப் பேர் பாடப் பெற்று ஆராத காதலையுடையராயிருப்பார்க்ள்; இவ்வளவேயல்லாமல் முற்றுலகையும் ஆளும்படியான செல்வச் சிறப்பும் பெற்றிடுவார்கள். இத்திருமொழியைக் கற்பவர்கட்கு மாத்திரமேயன்றி பலன்; இதனைச்செவி தாழ்த்துக்கேட்க விரும்புமவர்கட்கும் அவசியம் அநுபவித்தே அறவேண்டிய துயர்களும் தொலைந்திடும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.

English Translation

This is a garland of sweet Tamil songs by Kaliyan, blest to sing the praise of the Lord of a thousand names. Those who learn to sing it will never satiate, Lo! They will rule the whole Earth, Even those who merely hear it, will be rid of sorrow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்