விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொருந்து மாமரம்*  ஏழும் எய்த புனிதனார்*
  திருந்து சேவடி*  என்மனத்து நினைதொறும்,*
  கருந்தண் மாகடல்*  மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
  வருந்த வாடை வரும்*  இதற்கினி என்செய்கேன்!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நினை தொறும் – அநுஸந்திக்கும் போதெல்லாம்
கரு தண்மா கடல் – கறுத்துக் குளிர்ந்து பெரிதான கடலானது
கங்குல் – இரவுமுற்றும்
ஆர்க்கும் – ஆரவாரிக்கும்
அது அன்றியும் – அதுவுந் தவிர

விளக்க உரை

ஆச்ரிதனான ஸுக்ரீவ மஹாராஜனுக்கு அரியன செய்தும் விச்வாஸத்தைப் பிறப்பித்துக் காரியம் செய்த மஹாநுபாவர் ஏற்கெனவே விச்வாஸங் கொண்டிருக்கிற நம்மைக் கைவிடமாட்டாரென்று அவருடைய திருவடிகளையே தஞ்சமென்றிருக்கை நமக்கு ப்ராப்தம் என்று அத்யவஸாயங்கொண்டு அத்திருவடிகளைச் சிந்திக்கும்போதெல்லாம் ஸமுத்ரகோஷமும் வாடைக்காற்றும் வந்து நலிகின்றனவே யென்கிறாள். என்னுடைய மநோரதப்படி அவருடைய திருவடிகள் எனக்குக் கிடையாமையாலே விரஹ வேதனையினால் நிலமங்கை யாடைக்கும வாடைக்கும் வருந்த வேண்டியிருக்கிறதென்கை. இதற்கு இனி என் செய்கேன்! ரக்ஷகர்தாமே கைவிட்டால் நான் செய்து கொள்ளத் தக்கது ஏதேனுமுண்டோ? அவருடைய அருளே அரண் என்றவாறு. இரண்டாமடியில் ‘திருந்து சேவடி’ என்றதற்கு “ஐச்வர்யப்ரகாசமான திருவடிகளை” என்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான மிட்டருளினதற்கு இணங்க “திரு உந்து” என்று பிரித்து உரைக்கப்பட்டது. ‘திருவுந்து’ என்று சந்தியாகாதது தொகுத்தல் விகாரம். இனி ‘திருந்து சேவடி’ என்பதை வினைத் தொகையாகவுங் கொண்டு உரைக்கலாம் திருந்துதலாவது - ஆச்ரிதர்கட்கென்றே வாய்த்திருத்தல்.

English Translation

The pure Lord pierced an arrows through even trees. Whenever my heart begins to contemplate his feet, the dark cold ocean roars alll night, the dew breeze blows and makes me sad, what can I do for this now? Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்