விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்*  நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
  சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று*  அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*
  பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை*  பாவையைப் பாவம் செய்தேனுக்கு,* 
  ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக*  நின் மனத்து வைத்தாயே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆர் அழல் ஒம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாய் –  அக்நிஹோத்ரியான அந்தணனுடைய தோட்டமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கின்றாய்
நிலம்நீர் அழல்வான் நெடு நிலம்கால் ஆய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ –
பஞ்சபூதங்களும் நாமேயாயிருக்கிறோ மென்கிற பெருமை நினைத்தோ?
சீர் கெழு கோதை – சிறந்த மயிர்முடியை யுடையளான விஉள்
என் அலது இலள் என்ற – என்னைத் தவிர்த்து வேறொரு கதியை யுடையவளல்லள் என்றுண்டான
அன்னது ஓர் தேற்றன்மை தானோ – அப்படிப்பட்ட தைர்யத்தினாலோ?

விளக்க உரை

பிரானே! இப்பரகாலநாயகியை (ஆரழலோம்புமந்தணன் தோட்டமாக நின்மனத்து வைத்தாயே.) இதற்குச் சிலர் கருத்துக் கூறுவதாவது – நித்தியம் தீ வளர்த்து ஹோமம் செய்கிற அந்தணனானவன் தன்னுடைய தோட்டத்திலுள்ள மரங்களை யெல்லாம் கொஞ்சங்கொஞசமாக வெட்டி வெட்டி நெருப்புக்கு இரையாக்கி அழித்துவிடுவதுபோல இவளை நீ சிறிது சிறிதாக அழித்துவிடப்பார்க்கிறாயே! என்றாம், இது சுவையற்ற கருத்து, “அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்திருக்கிற ப்ராஹ்மணன் தோட்டமாக நினைத்தாயே“ என்ற பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் காட்டப்பட்ட கருத்தே சுவையுடையதாம். அல்லும் பகலும் அதற்கென்றே உழைக்கக் கூடியவனுடைய தோட்டம் செழிப்புற்றோங்கி வளருமேயல்லது அக்நிஹோத்ரம் பண்ணிப் போது போக்குமவனுடைய தோட்டம் செழித்து வளரமாட்டாது, கவனிப்புக் குறைவினால் பாழாய்ப்போய்விடும். ஆகவே, அக்நிஹோத்ரியானவனுக்குத் தோட்டத்திலே எப்படி அலக்ஷயதாபுத்தி இருக்குமோ அப்படி உனக்கும் இவளிடத்திலே அலக்ஷியம் உண்டாய்விட்டதே! என்பதாகவே கருத்தாகும். இப்படி நீ இவளை அலக்ஷியம் செய்வது (நீரழல்வானாய் நெடுநிலங்காலாய் நின்ற நின்னீர்மையை நினைந்தோ?) பஞ்சபூதங்களும் நாமிட்ட வழக்காக இருக்கும்படியான பெருமைவாய்ந்த நமக்கு இப்பெண்பிள்ளை ஒரு சரக்கோ? என்று கருதுகின்றாயோ? அன்றி இவளுக்கு நம்மைத் தவிர வேறு புகலாவார் இல்லாமையாலே நம் கையையே எதிர்பார்த்துக் கதறித்துடிக்கட்டும் என்று நினைவோ? என்கிறாள்.

English Translation

My daughter is sweet as the ambrosia churned from the Earth-girdling ocean. Alas I am sinner! You treat her with the proverbial indifference of a fire-worshipping Vedic seer to his orchards. Is it because you can manifest yourself in water, fire, space, earth and air? Or is because of the satisfying thought that this auspicious girl has no refuge other than you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்