விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செருஅழியாத மன்னர்கள் மாள*  தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
  அருவழி வானம் அதர்படக் கண்ட*  ஆண்மைகொலோ? அறியேன் நான்,*
  திருமொழி எங்கள் தேமலர்க் கோதை*  சீர்மையை நினைந்திலை அந்தோ,* 
  பெருவழி நாவல் கனியினும் எளியள்*  இவள்எனப் பேசுகின்றாயே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திருமொழி – சிறந்த (மதுரமான) பேச்சையுடையவளாய்
தேன் மலர் கோதை – தேனொழுகும் மலர்களணிந்த மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
சீர்மையை – சிறப்பை
நினைத்திலை – அறிகின்றிலை
அந்தோ – ஐயோ!

விளக்க உரை

பிரானே! பேச்சிலினிமையாலே உனது நெஞ்சையும் கவர வல்லளாய், தலையில் பூவிணிந்திருக்குமழகாலே உன்னைப் பிச்சேற்றவல்லளான இப்பரகாலநாயகியின் சிறப்பைச் சிறிதும் நினைக்கின்றிலையே!, இவளிடத்தில் மிகவும் அலக்ஷியம் பாராட்டுகின்றனையே!, இதற்கு என்ன காரணம்? * பார்த்தன் சிலை வளையத் திண்டர்மேல் முன்னின்று, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழியச் செய்த மிடுக்கை நினைத்தோ இவளை இங்ஙனே அலக்ஷியஞ் செய்கிறாய் என்கிறாள். செருவழியாத மன்னர்கள் – பாரதயுத்த்த்திற்கு முன்பு ஒருகாலும் ஓரிடத்திலும் தோல்வி பெற்ற்றியாத (அதிரதமஹாரதர்களான) பீஷ்மத்ரோணாதிகள். (தேர்வலங்கொண்டு) தான் ஆயுதமெடுப்பதில்லை யென்று பிரதிஜ்ஞை பண்ணி வைத்திருக்கையாலே தேர்க்காலாலே பிரதிபக்ஷங்களை உழக்கினானாயிற்று. போர்களத்தில் மாண்டொழிந்தவர்கள் வீரஸ்வர்க்கம் புகுவதாக சாஸ்த்ரங்களின் கொள்கையாதலால் “அவர் செல்லுமருவழி வானம்“ எனப்பட்டது. பாரதயுத்த்த்துக்கு முன்பு நெடுநாளாகவே வீரஸ்வர்கத்துக்குப் போவாரில்லாமையாலே புல்லெழுந்து கிடந்த அவ்வழியைப் பெருவழியாம்படி செய்தன்ன் கண்ணபிரானென்க. அப்படிப்பட்ட ஆண்பிள்ளைத் தனத்தை நினைத்தோ இவளை அபதாத்தமாக நினைக்கிறாய்? பெருவழிநாவற்கனியினு மெளியளிவள் –பெரியதொரு வழியிலே நாவற்பழம் விழுந்துகிடந்தால் அதைக் குனிந்தெடுக்கவுமாய்த் தவிரவுமாயிருக்குமன்றோ, அதுவே எட்டாத நிலத்திலே யிருக்குமாகில் அபேக்ஷை விஞ்சியிருக்கும், ஸர்வஸாதாரணமான வழியிலே வீழ்ந்து கிடந்த்தாகில் ஒரு பொருளாகத் தோற்றாதிறே. அதுபோலவே இவளையும் கருதுகின்றாய் போலும். பேசுகின்றாயே என்றது – கருதுகின்றாயே என்றபடி. (முதற்பாட்டினுரை காண்க.)

English Translation

In the great Bharata war you drove chariot and despatched many mighty kings to sky through the difficult path of death, Is is your manly pride that you do not think of our soft-spoken daughter;s good qualities? I do not know. You treat her like the proverbial rose-apples fallen bythe wayside

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்