விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கார்ஆர் புயல்கைக்*  கலிகன்றி மங்கையர்கோன்,* 
  பேராளன் நெஞ்சில்*  பிரியாது இடம்கொண்ட*
  சீராளா செந்தாமரைக் கண்ணா!*  தண்துழாய்த்*
  தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!*  தடமார்வா கொட்டாய் சப்பாணி.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேராளன் - பெருமை பொருந்தியவரான
கலி கன்றி - திருமங்கையாழ்வாருடைய
நெஞ்சில் - திருவுள்ளத்திலே
பிரியாது - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல்
இடம் கொண்ட - நித்யவாஸம் பண்ணுகின்ற

விளக்க உரை

ஆழ்வார் தாமான தன்மையிற் பேசாதே பிறருடைய நிலைமையை ஏறிட்டுக் கொண்டு பேசும் பதிகங்களில் இறுதியில் வரும் நிகமனப்பாசுரம் மாத்திரம் வேறுபட்டு வருகிற வழக்கம் இதில் மாறிற்று. முதற்பாட்டில் இவர்மேல் வந்து புகுந்த யசோதை நிலைமை இப்பாட்டிலும் நீங்கவில்லையாயிற்று. இதுவும் யசோதைப்பிராட்டி சொல்லுவதுபோலவே அமைந்துள்ளது. (என் னெஞ்சிற்போலவே) திருமங்கையாழ்வார் திருவுள்ளத்திலுங் குடிகொண்டிருக்கும் திருமாலே! சப்பாணி கொட்டவேணுமென்று யசோதை சொல்வதாகவே தலைக்கட்டிற்றாயிற்று. இத்திருமொழி கற்பார்க்குப் பயனுரையாதொழிந்தது, இப்படிப்பட்ட பிரார்த்தனையை பயனாக அமையும் என்று காட்டுதற்குப்போலும்.

English Translation

O Lotus-eyed Lord krishna, forever gracing the heart of the benevolent and benign king kalikanri! Clap chappni! O Lord with wide auspicious chest graced by cool Tulasi garlands! Clap chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்