விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கேவலம் அன்று*  உன்வயிறு வயிற்றுக்கு*
  நான் அவல் அப்பம் தருவன்*  கருவிளைப்-
  பூஅலர் நீள்முடி*  நந்தன்தன் போர்ஏறே,* 
  கோவலனே! கொட்டாய் சப்பாணி!*  குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கருவிளைப்பூ அவர் - காக்கணம் பூவைக் காட்டுகின்ற நிறமுடையவனே!
நீள் முடி - நீண்ட திருவபிஷேக முடையவனே!
நந்தன் தன் போர் ஏறே - நந்தகோபன் வளர்க்க வளர்ந்த செருக்கின காளையே!
கோவலனே - பசுமேய்க்க வல்லவனெ!
உன் வயிறு கேவலம் அன்று - உன் வயிறு ஸாமந்யமானதன்று,

விளக்க உரை

அட்டுக் குவிசோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறு மடங்கப் பொட்டத் துற்றின திருவயிற்றுக்கு அப்பப்பணியார வகை ஒன்று போருமோ? இன்னமும் பலவகைப் பொருள்களிலே விருப்பமுற்றவனாய் நிற்க, யசோதை சொல்லுகிறாள், பிரானே! உன்வயிறு மற்றையோருடைய வயிறுபோல் ஸாமந்யமானதன்று, * பேழை வயிற்றெம்பிரான் நீ என்பதை நன்கறிவேன். அந்த வயிற்றுக்கு ஏற்றவாறு அவலும் அப்பமும் நான் தருவேன் சப்பாணி கொட்டாய் என்கிறாள். இரண்டாமடியில் “நான் வலவப்பம்“ என்று பாடபேதமுள்ளதாக அரும்பதவுரை கூறுகின்றது, சிலருடைய பாடமும் அப்படி யிருந்தாலும் அது வேண்டா. ‘கருவிளைப்பூவலர்’ என்பது கண்ணபிரானுக்கு விசேஷணம். கருவிளைப்பூவை அலர்விப்பவன் (அதாவது) தன் திருமேனி நிறத்தினால் விளங்கச் செய்பவன் என்றவாறு.

English Translation

O Fighter-Bull of tall-crowned Nandagopa;s clan! O Dark cowherd-Lord! Yours is not an ordinary; stomach! I shall give you flaked rice to go with the Appam for your hunger. Clap Chappani! O pot-dancer! Clap Chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்