விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சோத்து என நின்னைத்*  தொழுவன் வரம் தர,* 
  பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,*  பெரியன-
  ஆய்ச்சியர்*  அப்பம் தருவர்*  அவர்க்காகச்-
  சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!*  தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சோத்தம் என - சோத்தமென்று சொல்லிக்கொண்டு
தொழுவன் - தொழுகின்றேன்
ஆய்ச்சியர் - இடைச்சிகள்
பெரியன அப்பம் தருவர் - பெரிய அப்பங்களை உனக்குக் கொடுப்பர்கள்,
அவர்க்காக சாற்றி - அவர்களுக்காக வென்று ஒரு வியாஜமிட்டு

விளக்க உரை

சோத்தம் என -சோத்தின, விகாரப் புணர்ச்சி. அஞ்ஜலி பண்ணுமவர்கள் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சொல் சோத்தம் என்பது. ஆயிரம் சப்பாணி - அப்பமும் கையுமாய் வந்து திரண்டிருக்கின்ற ஆய்ச்சிகள் ஆயிரக்கணக்காயிருப்பதால் ஒவ்வொரு அப்பத்துக்கு ஒவ்வொரு சப்பாணி விழுக்காடு ஆயிரம் சப்பாணி கொட்டவேணுமென்கிறாள் போலும். ‘அவர்க்காகச் சாற்றி’ என்றது. “நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்“ என்றது போலவென்க. அவர்களுக்காகச் சப்பாணி கொட்டுகிறேனென்று சொல்லிக்கொண்டு என்றவாறு.

English Translation

O Child who sucked the ogress breast! I beg of you with folded hands, favour me. The cowherd dames will give you big Appam, Sweet rice bread. At least for their sake, clap a thousand Chappani! With beautiful hands, Clap Chappanil!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்