விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வென்றி தந்தோம் மானம் வேண்டோம்*  தானம் எமக்குஆக*
  இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்*  எம்பெருமான் தமர்காள்*
  நின்று காணீர் கண்கள்ஆர*  நீர் எம்மைக் கொல்லாதே*
  குன்று போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நீர் - நீங்கள்
எம்மை கொல்லாதே - எங்களைக் கொல்லாமல்
கண்கள் ஆர - கண் படைத்த பயன் பெறுமாறு
நின்று காணீர் - நின்று காணுங்கோள்
குன்றுபோல - நாங்கள் மலைமலையாக நின்று

விளக்க உரை

ஸ்ரீராமபக்தர்களே! நீங்கள் எங்களைக் கொல்ல வேணுமென்று நினைக்கிறது உங்களுடைய வெற்றிக்காகவன்றோ, அந்த வெற்றியை நாங்கள் உங்கட்குத் தந்திட்டோம், (அதாவது -நாங்கள் தோற்றோமென்று சொல்லி உங்களுடைய வெற்றியைப் பிரசுரம் செய்துவிட்டோமென்றபடி) நாங்களும் ஆண்பிள்ளைகளென்று மார்பு நெறித்து வந்த்தனாலன்றோ நீங்கள் எங்களை நலிய வேண்டிற்றாயிற்று, அப்படி எங்களுடைய நலிவுக்கு ஹேதுவான அஹங்காரத்தையும் விட்டுத் தொலைந்தோம், இனி எங்களுடைய ஜீவனம் நீங்களிட்ட வழக்காகையாலே எங்கள் ஆயுஸ்ஸை எங்களுக்கு இன்று தாரைவார்த்துத் தந்தஞ்செய்து விடுங்கோள், நாங்கள் இங்ஙனே வாயாலே இரந்து கேட்பதற்காகவே நீங்கள் எங்களைக் கொல்லாது விடவேணுமென்பதில்லை, நீங்கள் கண்படைத்த ப்ரயோஜனம் பெறவேண்டில் நாங்களாடும் குழமணி தூரக்கூத்தைக் காணவேணுமன்றோ, எங்களைக் கொன்றுவிட்டால் இக்கூத்தை எங்ஙனே காண்பீர்கள்? ஆகையாலே இவ்வதிசயத்தைக் காண வேண்டியதற்காகவும் எங்களைக் கொல்லாதொழியவேணு மென்கிறார்கள்.

English Translation

O Devotees of the Lord Sri Rama! We concede your victory, we seek no honour. Grant us a new lease of life today, pray do not kill us. Stay and witness to your heart;s content, we dance the Kulamani Durma

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்