விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று*  தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
  மாழை மான்மட நோக்கியை விட்டு*  வாழகில்லா மதிஇல் மனத்தானை*    
  ஏழையை இலங்கைக்கு இறை தன்னை*  எங்களை ஒழியக் கொலை அவனை* 
  சூழு மாநினை மாமணி வண்ணா!*  சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மா மணி வண்ணா - நீலமணிநிறத்தனாவ பெருமானே!
தாழம் இன்றி - காலதாமதமில்லாமல்
முந்நீரை - கடலை
அஞ்ஞான்று - அன்றைக்கு
தகைந்ததே கண்டு - அணைசெய்த்தொன்றையே கண்டு,

விளக்க உரை

சிறிதும் தாமதமின்றிக் கடலிலே அணைக்கட்டிக் கடந்து வருவதென்பது எளிதான காரியமன்றே, மிக அரிதான அக்காரியத்தையும் செய்து விட்டார்களென்பதை அறிந்தபின்பாவது ‘ஓ இவர்கள் ஸாமாந்ய மநுஷ்யரல்லர், தெய்வங்களாகவே யிருக்கவேண்டும், இல்லையேல் இவ்வருந்தொழில் செய்யக் கூடுமோ?’ என்று நினைத்து ‘இனி நாம் ஸீதையை ஸமர்ப்பித்துவிட்டு உயிர்தப்பி உய்வதே உரியது’ என்று கொண்டு அங்ஙனே செய்து வாழ்ந்து போகலாமே ராவணன், அப்படி வாழமாட்டாதே ‘நாம் இலங்கைக்கு அதிபதியன்றோ? நம்மையும் அடர்ப்பாருண்டோ?’ என்ற அஹங்காரத்தையே மேற்கொண்டிருந்த அப்பாவியை, மாமணிவண்ணா! இஷ்டப்படி கொன்றுவிடாய், அக்கொலையின் நின்றும் எங்களைமாத்திரம் தவிர்த்தருளவேணும் என்கிறார்கள். தாமம் - தாழ்வு, காலவிளம்பம். பிராட்டியின் வடிவழகையும் கண்ணழகையும் அநுபவிக்கவுரியவன் இராமபிரானொருவனே யன்றி நாம் எங்கே! அவை எங்கே! என்று இராவணன் நினைத்திருக்கவேணு மென்பது தோன்ற ‘வஞ்சிநுண்மருங்கல் மாழைமான் மடநோக்கியை’ என்றனர். கள்ளங் கபடமின்றிக் கவலையையும் அச்சத்தையுங் கொள்ளும் மகளிர் கண்ணோக்கிற்கு வெகுண்ட மானின் மருண்ட பார்வையை உவமை கூறுதல் மரபு. இங்கு இது கூறியதனால், அசோகவனத்தையும் அங்குள்ளாரையுங் கண்டவளவில் பிராட்டி. மருண்ட நோக்குடையளாயின ளென்பதுதோன்றும், மாழை - அறிவின்மை, அழகுமாம். ஏழை -தகாத விஷயத்தில் வீணான சாபல்யங் கொண்டவன்.

English Translation

O Gem-hued Lord! Even after seeing that you had made a bridge and were crossing the ocean, they mindless, whimsical Ravana did not give up the creeper-thin-waisted fawn-eyed Dame Sita. Pray spare us, we will tell you how to round up the others. We dance in fear to the sound to the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்