விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்*  சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து* 
  வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே*  குற்றம் ஆயிற்றுக் காணீர்*
  கும்பனோடு நிகும்பனும் பட்டான்*  கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி* 
  அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இராவணன் - ராவணனானவன்
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து - ஸீதையென்கிற ஒரு தெய்வப் பெண்ணைக் கவர்ந்து வந்து
வம்பு உலாம் கடி காவில் - புதுமை மாறாத்தும் பரிமளத்தை யுடையதுமான (அசோக)வனத்திலே
சிறை ஆ வைத்ததே - சிறையிலிருப்பாம்படி வைத்திருந்த இதுதானே
குற்றம் ஆயிற்று - அபராதமாய்த் தலைக் கட்டிற்றுக்கிடீர்

விளக்க உரை

வாரீர்!, எங்கள் இராவணனுடைய பெருமை எப்படிப்பட்டது தெரியுமோ? பலதிசைகளிலுஞ் சென்று வெற்றி பெற்றுச் செம்பொன் முடிகவித்துக் கொண்டவன். அனைவரும் அவன் கீழே கைகட்டிக் காத்திருக்க வேண்டியவர்கள், அப்படி யிருக்கச் செய்தேயும், ஸீதாபிராட்டியாகிற ஒரு தெய்வப்பெண்ணைக் கவர்ந்துவந்து இவ்வசோகவனத்திலே சிறைவைத் திட்டதே அவனுக்குப் பெரிய அபராதமாகத் தலைக்கட்டிற்று. அதுவே காரணமாகக் கும்பன் நிகும்பன் முதலான பெரிய ரணவீரர்களும் மாண்டொழியலாயிற்று. இராவணன் கையிலே முன்பு தோற்றுக்கிடந்த ம்ருத்யுவானவன் அந்த வுருவத்துடன் இங்கு வரவல்லனல்லாய் இராமனென்னும் பெயராலே ஒரு மானிட வடிவு கொண்டுவந்து நின்று எங்கள்மேல் சரவர்ஷத்தை வர்ஷிக்கின்றான். கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி - இராவணன் நெடுநாள் தவம்புரிந்து வரப்ரஸாதம் பெறும்போது மானிடரை ஒரு பொருளாகவே மதியாமல் அவர்களைத் தவிர்த்து மற்று யாராலும் தனக்குச்சாவு நேரிடாமை வேண்டின்னாதலால் அவன் உபேஷித்த மானிடத்தில் திருமால் வந்து தோன்றின்னென்க. யமன்றானே இப்படி மானிடமாய் வந்து தோன்றினனாக இவர்கள் கூறுவது தங்கள் சாதி மொழிக்கு ஏற்றதாம். கூற்றம் - உடலையும் உயிரையும் வேறு வேறு கூறாக்குபவன் என்ற காரணப் பெயர்.

English Translation

Our fall-golden-crown-king Ravana brought here a goddess called Sita and held her captive in fragrant groves of Asoka Vana. Alas, that has been our undoing-just see! Kumba and Nigumba are dead; the very god of death in human form comes wielding a bow to take us. We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்