விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எஞ்சல்இல் இலங்கைக்குஇறை*  எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
    நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று*  நங்கையை அவன் தம்பியே சொன்னான்*
    விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்*  வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
    அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏஞ்சல் இல் - ஒரு குறைவுமில்லாதவனாய்
இலங்கைக்கு இறை - (இந்த) லங்காபுரிக்கு அரசனாய்
எம் கோன் தன்னை - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனை நோக்கி
முன் - முன்பு
எங்கள் கண் முகப்பே - எங்கள் கண்ணெதிரில்

விளக்க உரை

விபீஷணன் முன்னமே மிக்க பெருஞ்சபை நடுவே இராவணனை நோக்கி ‘பாவீ! சானகியை அபஹரித்துக் கொண்டுவந்தாயே, இவள் அரக்கர் குடிக்கு விஷம்போன்றவள் என்பதை அறிந்திலையே, இவளைக் கவர்ந்துவந்ததே காரணமாக அரக்கர்குடி முழுதும் வேரற்றொழியப் போகிறதுகிடாய், இப்போதும் குற்றமில்லை, இன்றே இராமபிரான் ஸந்நிதியில் இவனைச் சேர்த்திடு’ என்று உபதேசித்தான், வணங்கி வேண்டிக்கொண்டான். அந்த ஹிதோபதேசம் இவன் செவியிற்புகாமையாலே தேவதைகளின் கோரிக்கை நிறைவேறப்பெற்றது. போனது போகட்டும், இனி உங்கள் பிராட்டியைக் கொண்டு செல்லுங்கள், எங்களை ஒன்றுஞ் செய்யேல்மின் - என்கிறார்கள். எஞ்சல் இல் - ஒருவகையாலும் குறைபாடு இல்லாதவன் என்றபடி. எஞ்சல் - குறைதல். விஞ்சை வானவர் – ‘வித்யா’ என்னும் வடசொல் ‘விஞ்சை’ என்றும் திரியும். தேவதைகளில் ஒரு வகுப்பான வித்யாதரர்களைச் சொன்னபடி. தேவஜாதிக்கெல்லாம் இது உபலக்ஷணமென்க. “ஸஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி - அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந“ என்கிறபடியே இராவணனைத் தொலைக்கவேணு மென்ற வானவர்களின் வேண்டுகோள் நிறைவேறப் பெற்ற தாயிற்று என்கிறார்ள். அஞ்சுஅல் ஓதியை - ஓதியென்று கூந்தலுக்குப் பெயர். ;ஐந்து; என்பது ‘அஞ்சு’ என மருவிக்கிடக்கின்றது. மிருதுவாயிருத்தல் குளிர்ந்திருத்தல் நறுமணம் மிக்கிருத்தல் கறுத்திருத்தல் நீண்டிருத்தல் என உத்தமகேச லக்ஷணம் ஐவகைப்பட்டதாகும். ‘அல்’ என்பது இரவுக்குப் பெயராகி இருளைக் குறிக்கின்றது. இருண்ட கூந்தல் என்றபடி. ஐவகைலக்ஷணங்களில் ‘கறுத்திருத்தல்’ என்பது சேர்ந்தேயிருத்தலால் ‘அல்’ என்றது புநருக்தியாகுமேயென்னில், ஐவகையில் கறுத்திருத்தல் என்பதை நீக்கி அடர்ந்திருத்தலைக் கூட்டிக்கொள்க. ‘அஞ்சலோதி’ என்றது அன்மொழித்தொகை. திருவெழு கூற்றிருக்கையில் “ஐம்பாலோதி“ என்றதுங் காண்க.

English Translation

O Lord Rama! The urelenting Lanka king our master had a younger brother who before out eye prostrated before him and advised. "This dame is a poison for our Rakshasa clan". As the celestials desired, now we have been crushed. Please take back your peacock-fair coiffured dame and return. We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்