விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்*   பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
  சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்*   செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*
  ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்*   ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்* 
  அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்*   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாழி - வலிமைமிக்கவையான
தோளும் - (இருபது) தோள்களையும்
படைத்தவன் -  உடையவனான இராவணன்
மங்கையர் பால் சித்தம் வைத்து - ஸ்த்ரீ விஷயத்தில் மனம் செலுத்தி
செல்வம் கெட்டான் - (தனது) செல்வம் அழியப் பெற்றான்

விளக்க உரை

மூன்றாமடியில் ‘வாழ்ந்தோம்’ என்றது விபரீதக்ஷணை, ;கெட்டோம் என்பதற்குப் பரியாயம். பத்துத்தலைகளையும் இருபதுகைகளையு முடையனான இராவணனைப்போலே விகாரமான சேஷமுடையரன்றியே இரண்டு தோள்களையும் ஒரு திருமுடியையு முடையரான பெருமான் திறத்திலே யீடுபட்டு விபீஷணாழ்வானைப் போலே நாங்களும் வாழ்ந்து போகலாமாயிருக்க அது செய்யாதே கெட்டுப்போனொம் என்றவாறு. “இந்து - இந்துஜீவ ஸ்ரீமாந்.“ என்னுமாபோலே தோளுக்குத் தோளே உவமை என்பது தோன்ற ஒத்த தோளிரண்டும் என்றது. அந்தத் தோளுக்கு இந்தத் தோளுவமை, இந்தத் தோளுக்கு அந்தத் தோளுவமை என்றபடி.

English Translation

O Lord, Endowed with ten crowned heads and double that many strong arms, our king placed his heart on women and lost his all. Not knowing what to do, we servants have grown up without devotion to Rama, a god with two hands and one head. Pray do not kill us. We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்