விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூந்தலார் மகிழ்*  கோவலன்ஆய்*  வெண்ணெய்-
    மாந்துஅழுந்தையில்*  கண்டு மகிழ்ந்துபோய்*
    பாந்தள் பாழியில்*  பள்ளி விரும்பிய*
    வேந்தனைச் சென்று காண்டும்*  வெஃகாவுளே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பள்ளி - திருக்கண்வளர்தலை
விரும்பிய - விரும்பிக் கைக்கொண்ட
வேந்தனை - ஸர்வேச்வரனை
வெஃகாவுள் - திருவெஃகாவில்
சென்று காண்டும் - போய் ஸேவிப்போம்

விளக்க உரை

கண்ணபிரானாய்த் திருவவதரித்து வெண்ணெய் விழுங்கின திருமாலைத் திருவழுந்தூரிலே கண்டோம், இனிப்போய்த் திருவெஃகாவிலே காணக்கடவோ மென்கிறார். திருவழுந்தூரிலெழுந்தருளியுள்ள பெருமானுடைய திருநாமம் ;ஆமருவியப்பன்; ஆதலால் கூந்தலார்மகிழ்கோவலனாய் என்றது. கூந்தலார் என்பது பெண்டிர்க்கு இயற்கைபற்றிய பெயர். அவர்கள் மிகழும்படியான கோவலன், “பெண்டிர்வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதுமென்று மாசையாலே, கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி, வண்டுலாம் பூங்குழலினார் உன்வாயமுத முண்ணவேண்டிக் கொண்டு போவான் வந்துநின்றார்“ “முந்தைநன்முறை அன்புடைமகளிர் முறைமுறை தந்தங் குறங்கிடை யிருத்தி, எந்தையே! என்றன் குலப்பெருஞ்சுடரே! எழுமுகிற்கணத் தெழில் கவரேறே!, உந்தையாவனென்றுரைப்ப.“ என்றிவைமுதலான பாசுரங்களில் கூந்தலார் மகிழ்ச்சி விளங்கக் காண்க. மாந்த + அழுந்தையில், மாந்தழுந்தையில், தொகுத்தல் விகாரம். பாந்தள் பாம்பு. பாழி - படுக்கை. திருவெஃகாவில் ஸ்ரீயதோக்தகாரி யெம்பெருமான் சேஷசாயிபிறே.

English Translation

The Lord who came as Gopala, pleasing to the coiffured Gopis, and gulped buffer, gave his Darshan in Tiruvalundur. Today we shall go and have his Darshan in Tiruvehka, where he reclines on a serpent-bed

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்