விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நேசம்இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 
  வாசமலர்ப் பொழில்சூழ்*  வடமா மதுரைப் பிறந்தான்,*
  தேசம்எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
  கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ!  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நேசம் இல்லாதவர்க்கும் - பரபக்தியில்லாதவர்களுக்கும்
நினையாதவர்க்கும் - (‘ஈச்வரனில்லை’ என்று நாஸ்திகவாதம் பண்ணுவதற்காகிலும் அவனை) நெஞ்சால் எண்ணாதவர்கட்கும்
அரியான் - கிட்டக்கூடாதவனும்,
வாசம் மலர் பொழில் சூழ் - மணம்மிக்கமலர்களையுடைய சோலைகளால் சூழப்பட்ட
வட மா மதுரை - திருவடமதுரையில்

விளக்க உரை

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கு மரியான்) நேசமாவது - ஸ்நேஹம் அதாவது பக்தி, அஃதில்லாதவர்களுக்கு எம்பெருமான் அரியவன் என்றது தகுதியே, நினையாதவர்க்கு மரியான்“ என்றது எங்ஙனே பொருந்தும்? நேசமில்லாதவர்களுக்கு அரியனாகும்போது நினையாதவர்களுக்கு எளியனாக ப்ரஸக்தியே யில்லாமையாலே அப்ரஸக்தப்ரதிஷேதம்போல “நினையாதவர்க்கு மரியான்“ என்ன கூடாதனடறோ? “இந்தச் சரக்கை நூறு காசு கொடுத்தாலும் கொடுக்கமாட்டென் ஒரு காசு கொடுத்தாலுங் கொடுக்கமாட்டேன்“ என்று சொல்லுவது எப்படி அஸம்பாவிதமோ அப்படியே இதுவும் அஸம்பாவிதமன்றோ? என்று சிலர் சங்கிக்கக்கூடும், கேண்மின், நேசமிலாதவர்க்கு அரியான்“ என்று மாத்திரம் சொல்லிவிட்டால், நேசமிலாதவர்களான சிசுபாலாதிகளுக்கு ப்ராப்தியுண்டானதாகச் சொல்லுகிற ப்ரமாணங்களுக்கு என்ன கதி? வைதுவல்லவா பழித்தவனான சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைதத்தென்பதைப் பராசர முனிவர் சொல்லிவைத்தார். கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன், திருவடிதாட்பாலடைந்த தன்மையறிவாரை யறிந்துமே“ என்றார் நம்மாழ்வாரும். ஆக, நேசமிலாதவர்களில் தலைவனான சிசுபாலனுக்கு எளியவனாகக் காண்கையாலே “நேசமிலாதவர்க்கு அரியான்“ என்றதற்கு மேலே ஒன்றுசொல்லிப் பரிஷ்கரிக்க வேண்டியதாயிற்று, அதற்காகவே “நினையாதவர்க்கு மரியான்“ என்றது, சிசுபாலன் நேசமிலாதவர்களிற் சேர்ந்தவனாயினும் நினையாதவர்களிற் சேர்ந்தவனல்லன், வைகிறவனுக்கும் பேர்சொல்லி வைய வேண்டுதலால் அதற்குறுப்பாக சிசுபாலன் எம்பெருமானை நினைத்தவனே யென்க. இனி, “பரபக்திக்கும் அத்சேஷத்துக்கும் வாசிவையாதே தன்னைக் கொடுப்பா னொருவனென்கை“ என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திப்படியே விவரணம் செய்து கொள்ளவுமாம். நேசமுள்ளவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் எளியனும் என்பது முதலடியின் தேர்ந்த கருத்து. இதனால் எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியமே வெளியிடப்பட்டதாம். பரமபக்தியுண்டானாலன்றிச் சிலர்க்கு இரங்கியருளான், சிலர் திறத்தில் அந்யபரமான சிந்தனையையும் வியாஜமாகக்கொண்டு மடிமாங்காயிட்டு அருள்புரிவானென்றவாறு. ஆக இப்படிப்பட்ட திருக்குணம் வாய்ந்தவனும் இத்திருக்குணத்தை வடமதுரையிற் பிறந்தருளிப் பிரகாசிப்பித்தவனும், அது தன்னை எட்டுப்புறத்தில் கேட்டுப் போகவேண்டாதபடி திருமாலிருஞ்சோலையிலே விளக்கா நிற்பவனுமான பெருமானை என்மகளான பரகாலநாகயகி காணப்பெறுவளோ? என்றதாயிற்று.

English Translation

The Lord who is hard to reach for those who have no love and who do not contemplate, him was born amid fragrant groves in Northern Mathura, He is kesava the Lord worshipped by the whole world, residing in Tirumalirusolai. Will my fish-eyed daughter be able to see him today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்