விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புனைவளர் பூம்பொழில் ஆர்*  பொன்னி சூழ் அரங்க நகருள்-
  முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
  சினைவளர் பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்றான்*
  கனைகழல் காணும்கொலோ?*  கயல் கண்ணி எம்காரிகையே!  (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முனைவனை - பிரதாநனும்
மூ உலகும் படைத்த - மூன்று லோகங்களையும் ஸ்ருஷ்டித்த
முதல் மூர்த்தி தன்னை - முக்கிய மூர்த்தியானவனும்
சினை வளர் பூ பொழில் சூழ் - பணைகள்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட
திருமாலிருஞ்சோலை நின்றான் - திருமாலிருஞ்சோலையில் நிற்பவனுமான எம்பெருமானுடைய

விளக்க உரை

ஸ்ரீரங்கத்தில் திருப்புன்னை மரத்திற்கு ஸம்பிரதாய முறையில் ஒரு விசேஷமுண்டாதலாள் இங்குப் புன்னையையிட்டு விசேஷிக்கப்பட்டது.

English Translation

The resident Lord of Arangam surrounded by the kaveri river that flows through cool groves of Punnai trees, the first cause Lord who made the three worlds, resides in Tirumalirumsolai amid. dense fragrant groves. Will my fish-eyed daughter see his tinkling feet today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்