விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எல்லியும் நன்பகலும் இருந்தே*  ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,* 
  நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,*  நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*
  வல்லன சொல்லி மகிழ்வரேலும்*   மாமணி வண்ணரை நாம்மறவோம்,* 
  கொல்லை வளர் இளமுல்லை புல்கு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏந்து இழையார் - ஆபரணங்களணிந்துள்ள பெண்கள்
எல்லியும் நல்பகலும் இருந்தே - இரவும் பகலும் போதுபோக்கற்று இருந்துகொண்டு
ஏசிலும் எசுக - பழிசொன்னாலும் சொல்லட்டும்:
நல்லர் - (அவர்கள்) பாக்யவதிகளன்றோ?
அவர் திறம் நாம் அறியோம் - அவர்களைப் பற்றி நமக்கு ஆராய்ச்சிவேண்டா;

விளக்க உரை

ஊர்ப்பெண்டுகள் இரவும் பகலும் வேறு போதுபோக்கற்று எனது நிகழ்ச்சியைப் பற்றியே வம்புகள் பேசிப் பழிகூறினும் கூறுக; அவர்களுக்கும் நமக்கும் என்ன சேர்த்தியுண்டு? அவர்களுடைய வகுப்பு வேறு, நம்முடைய வகுப்பு வேறு; நாமோ விரஹத்தாலே உடலிளைத்து வளையிழந்து வருந்துகின்றோம்; அவர்களோ ஏந்திழையார் - ஆபரணங்களைச் சுமந்துகொண்டிருக்க வல்லவர்கள். நாம் உற்ற விஷயத்தை அவர்கள் கனவிலும் கண்டறியார்கள்; தத்தம் நாயகரைப் பிரிந்துமறியார்கள்; ஆகவே அவர்கள் பாக்யவதிகள்; அன்னவர்கள் எதைச்சொல்லிலும் சொல்லுக அவர்கள் சங்கதி நமக்குத் தெரியாது; அவர்கள் நாண் மடம் அச்சம் முதலிய பெண்மைக்குணங்களைக் காத்துக்கொண்டு நிலைகுலையாதே யிருக்கவல்லவர்கள்; நமக்கோ அவை அற்றுப்போயின நம்மைவிட்டுப் போனவன் அவற்றையும் கொள்ளைகொண்டு போயினான் போலும்; அவர்கள் தங்களாலான மட்டும் வசைகூறிச் சிரிக்கட்டும்; அவர்கள் தாம் என்னவென்று சொல்லப்போகிறார்கள்? ;அவனை மறந்திலன்; என்றுதானே சொல்லிச் சிரிக்கப்போகிறார்கள்; அப்படியே சொல்லிச் சிரிக்கட்டும்; அவனை நாம்மறக்கக் கடவோமல்லோம்; மறப்பு நம்கையிலே கிடக்கிறதோ? அவனுடைய மாமணிவண்ணவடிவு நம்மை மறக்கப்பண்ணுமோ? இவர்கள் ஏசுவதெல்லாம் இன்னமும் அவனையே ஸ்மாpப்பதற்கு எருவிட்டதாகுமத்தனைசிரிப்பார்கண்வட்டத்திலே நமக்கு என்ன காரியம்? மறக்கவொண்ணாத வடிவைக் கண்ணாரக்கண்டு அநுபவிக்கலாம்படியான திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள் என்றாளாயிற்று. நாண்மடம் அச்சம் = இவை பெண்டிர்க்கு உரிய குணங்கள் ; நாணமாவது-தகாத காரியத்தில் மனமொடுக்கி நிற்பது, மடமாவது-எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல். அச்சமாவது-மிகச்சிறிய காரணத்தினாலும் மனம் நடுங்குதல். (‘பயிர்ப்பு’ என்பது நான்காவது குணம்; அதாவது-பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பாட்டால் அருவருப்புக்கொள்வது.) நாண்மடமச்சம் நமக்கிங்கில்லை; என்றது-ப்ராவண்யம் மீதூர்ந்தபடியைச் சொன்னவாறு. வரம்புகடந்த அன்பின்மே லெல்லையில் நிற்பார்க்கு நாணம் முதலியவற்றைக் காத்துக்கொள்ளல் ஆகாதன்றோ. குறுங்குடிக்கு “இளமுல்லைபுல்கு” என்ற விசேஷணமிட்டதற்கு ஒரு கருத்துண்டு; கொடிகள் ஆதாரமற்றுத் தரைக்கிடை கிடக்கவேண்டாமல் கொள்கொம்பிலே படரும் தேசமன்றோ அது; அப்படியே எனக்கும் தரிப்புக்கிடைக்குமே அங்கு-என்றவாறு. “கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம்,”

English Translation

Let them sit and criticise night and day if they wish to, -those jewlled ones are good girls, -we cannot match or counter them, we have no shame or reserve or fear. Even if they say clever things and laugh at us, we cannot forget our gem-hued Lord. Carry me now to his abode in Kurungudi, amid groves of fresh Mullai flowers

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்