விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
  வள்ளல் மாயன்*  மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*
  கள் அவிழும் மலர்க் காவியும்*  தூமடல் கைதையும்,* 
  புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த*  புல்லாணியே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எள்கி - ஈடுபட்டு
இங்கு இருந்து என் - இங்கேயிருப்பதனால் என்ன பலன்?
வள்ளல் - உதாரனும்
மாயன் - ஆச்சர்யச் செய்கைகளையுடை யவனும்
மணிவண்ணன் - நீலமணிபோன்ற நிறமுடையவனுமான
எம்மான் - எம்பெருமான்

விளக்க உரை

ஸம்ச்லேஷித்த ஸமயத்தில் அப்பிரான் தனது திருமேனியைப் பூர்ணாநுபவ யோக்யமாக ஸர்வஸ்வநாகம் பண்ணினபடியை உத்தேசித்து வள்ளல் என்றாள். அப்படி கலந்து பரிமாறினவன் இப்போது நான் இங்ஙனே பதறியோடிவரும்படி எட்டாதவனாய் வஞ்சகம் செய்கிறானென்ற கருத்துடனே மாயன் என்றாள், அவன் நம்மை அபேக்ஷிக்கிலுமாம், உபேக்ஷிக்கிலுமாம்; கொலை செய்தாலும் விடவொண்ணாத வடிவு படைத்தவன் என்கிறாள் மணிவண்ணன் என்பதால். அவ்வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக எழுதிக் கொண்டா னென்கிறாள் எம்மான் என்று, இப்படிப்பட்டவன் வர்த்திக்கிற புல்லாணியைத் தொழுதும் எழு நெஞ்சே!. அவன் நித்யவாஸம் பண்ணுகிற விடத்தே சென்றால் அவனுக்கும் நமக்கும் நினைத்தபடி பரிமாறலாம்படியான ஏகாந்த ஸ்தலங்களுண்டு என்கிறாள் பின்னடிகளால். கள்ளவிழும் மலர்க்காலியும் ஸ்ரீ திவ்ய தம்பதிகள் ஜலக்ரிடை பண்ணும்போது அழகிய செங்கழுநீர்ப் பூக்களைப் பார்த்து இவை செவ்வியழிவதற்குமுன்னே பறிக்கவேணுமென்று ஒருவர்க்கொருவர் முற்பட்டுப் பறித்து ஒருவர் மேலொருவர் எறிய, அவை மேலேபட்டு மதுவொழுகுமழகைக் காணலாயிருக்குமென்ப (தூமடல் கைதையும்) தலைமகன் தோள் கொடுக்க ஏறிப் பறிக்கலாம்படியான வெள்ளை மடலையுடைய தாழையும்;. (புள்ளும்) பலவகையான பறவைகளைக் கண்டு ;இதன் பெயர்என்ன? இதன் பெயர்என்ன?” என்று தலைவி கேட்கவும் தலைமகன் அவற்றின் பேர்களைச் சொல்லவும் பெற்ற பட்சிகளும் (அள்ளல் பழனங்களும்) அல்லலறியாத செல்வப் பெண்பிள்ளையாக வளர்ந்த தலைமகள் மருமமறியாத நீர்நிலைகளிலே புக்கு அங்கே சேறுகளில் அழுத்தி நின்றால் தலைமகன் கைப்பிடி கொடுத்துத் தூக்கியெடுக்க வேண்டும்படியான நிலங்களும், ஆக இப்படிப்பட்ட வாய்ப்புகளமைந்த புல்லாணியே தொழுவோமென்றாளாயிற்று.

English Translation

O Heart! What use sitting here thinking about him and melting? Our benevolent gem-hued wonder-Lord prefers to stay in Pullani surrounded by fertile groves filled with nectar-dripping lotuses, white pollen-dusted screwpines and water-birds in flocks. Bow that-a-ways and arise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்