விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உணரில் உள்ளம் சுடுமால்*  வினையேன் தொழுதும் எழு,*
  துணரி நாழல் நறும்போது*  நம்சூழ் குழல்பெய்து,*  பின்- 
  தணரில் ஆவி தளரும்என*  அன்பு தந்தான்இடம்,* 
  புணரி ஓதம் பணில*  மணிஉந்து புல்லாணியே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புணரி ஓதம் - கடலலைகளானவை
பணிலம் - சங்குகளையும்
மணி - ரத்னங்களையும்
உந்து - ஒதுக்கித் தள்ளுமிடமாயுள்ள
புல்லாணி - திருப்புல்லாணியை

விளக்க உரை

கீழ் மூன்றாம்பாட்டில், மறக்கமுடியவில்லை யென்றாள்; இப்பாட்டில் நினைக்க முடியவில்லை யென்கிறாள்; மறப்பது நினைப்பது என்று இரண்டு உண்டு; அவையிரண்டு அருமைப்படுகின்றன போலும் இவர்கட்கு. எதையேனும் நினைத்துக் காலங்கழிக்க வேண்டுதலால், காலக்ஷேபத்துக்காக நினைக்கில் அது ஆச்ரயத்தை வேவச் செய்யா நின்றது; நடந்தவற்றை நினைத்தவாறே நெஞ்சு கொதிக்கின்றதே! என்கிறாள், அசோகவனத்திலே பத்துமாஸம் பிரிந்திருந்த பிராட்டி * “ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே - புஞ்ஜாநா அமாநுஷாக் போகாந் ஸர்வகாமஸம்ருத்திநீ! என்று பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டுபோது போக்கவில்லையா? அவளைவிட உனக்கு விசேஷமென்? என்ன; வினையேன் என்கிறாள். அவளத்தனை பாக்யம் பண்ணிற்றேலேன் நான்; நடந்தவற்றை நினைத்த மாத்திரத்திலே நெஞ்சு சுடும்படியான பாவத்தைப் பண்ணினேனென்கிறாள். ப்படிப்பட்ட விஷயந்தான் என்ன நடந்தது? என்ன, “துணரினாழல் நறும்போது நஞ்சூழ்குழல் பெய்து, பின்தணரில் ஆவிதளருமென அன்புதந்தான்” என்கிறாள். கலவி செய்த காலத்திலே அவன் செய்த ச்ருங்கார விலாஸங்களை என்ன சொல்வேன்! பூங்கொத்துகளையுடையத்தான நாழலினுடைய செவ்விப்பூக்களைப் பறித்து என்குழலிலே சூட்டினான்; இனி ஒரு நொடிப்பொழுது பிரிந்தாலும் பிராணன் மாறிப் பறந்துபோய்விடு மென்னும்படியாக அளவுகடந்த அன்பைக்காட்டிப் பரிமாறினான்; அத்தனையும் பிரிவுக்கு உடலாகவே செய்தான்போலும்; பிரியேனென்று சொன்ன வாய்மூடுவதற்கு முன்னமே பிரிந்துபோனான்; இவையே என்னுற்றத்தை வேவச் செய்யா நின்றன வென்கிறாள். அப்படிப்பட்டவன் வர்த்திக்கிறவூரிலே போய் முறையிட்டுக் கொள்ளுவோ மென்கிறாள். துணரினாழல் = ;துணர் இன் நாழல்; என்று பிரிக்க. துணர் - பூங்கொத்து, ;துணரி நாழல்;; என்ற பாடத்துக்கு ;துணரி என்று சொல்வடிவமாகக் கொள்ளவேணும்; அங்ஙனுண்டாகிற் கண்டுகொள்வது. நாழல் எனினும் ஞாழல் எனினும் ஓக்கும்; கோங்கு மரமும் குங்குமமரமுமாம்.

English Translation

O Heart! My heart sizzles when I think of it. Alas, I am a sinner! He plucked a bunch of red fragrant Nalal flowers and decked our coiffure with it, saying, "I will die if we are separated", then gave me his love. He now resides in Pullani by the sea where the waves wash out pearls from oyster shells. Bow that-a-ways and arise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்