விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்*  கொடியேற்கு,*  முன்- 
  நங்கள்ஈசன்*  நமக்கே பணித்த மொழிசெய்திலன்*
  மங்கை நல்லாய்!  தொழுதும் எழு*  போய் அவன் மன்னும்ஊர்,* 
  பொங்கு முந்நீர் கரைக்கே*  மணி உந்து புல்லாணியே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அவன் மன்னும் ஊர் - அப்பெருமான் பொருந்தி வாழுமிடமாயும்
பொங்கு முந்நீர் - அலைமோதுகின்ற கடலானது
கரைக்கே - கரையோரத்திலே
மணி உந்து - ரத்னங்களைக் கொழித்துத்தள் ளுமிடமாயுமுள்ள
புல்லாணி - திருப்புல்லாணியை

விளக்க உரை

தோழியை நோக்கிச் சொல்லுகிற பாசுரமிது. பரகால நாயகி தனது உயிர்த்தோழியை நோக்கி ;திருப்புல்லாணியே சென்று தொழுவோம் புறப்படு; என்றாள்; ;அங்குச் செல்ல வேண்டுவது ஏதுக்காக?; என்று கேட்டாள் தோழி. ;நம்முடைய தலைமகள் வர்த்திக்கிற தேசமன்றோ அது; என்றாள் தலைவி, ;நம்முடைய தலைமகன் என்று நீ சொல்லும்படி அவனுக்கும் உனக்கும் ஏதேனும் உறவு நேர்ந்ததுண்டோ?; என்று கேட்டாள் தோழி. ;ஏன் நேரவில்லை, நன்றாக நேர்ந்ததுண்டு; வந்து கலவி செய்த துண்டோ; என்றாள் தலைவி. ;அப்படியாகில் அதற்கு யாரேனும் ஸாக்ஷியுண்டோ?; என்றாள் தோழி. ஸாக்ஷிகளுண்டாகில் அவர்களையுங் கூட்டிக்கொண்டு சென்று அப்பெருமானை வளைத்து வடிம்பிடலாம் என்ற கருத்தாலே கேட்டாள். அதற்கு “கொங்குண்வண்டே கரியாகத்தான் கொடியேற்கு” என்கிறாள் தலைவி; அநதோ! ரஹஸ்யமாக வந்து கலந்து போனாளே!; அவனும் நானுமேயாம்படியன்றோ வந்தது; தன்துளபமாலையில் மதுபானம் பண்ணுகிற வண்டே ஸரக்ஷியாக வந்து போனானித்தனையே என்கிறாள். அந்த வண்டீனுடைய பாக்கியமும் ஒரு பாக்கியமே!; நான் உபவாஸத்தாலே மெலிந்துகிடக்க, அது தேனைப் பருகிக் களித்திருக்கிறபடி என்னே! என்கிறாள். ஒருநாளும் தாம் நோவுபடாதே பிறர்நோவு மறியாதே உண்டு களித்துத் திரியுமவர்கள் பிறர்க்குக் காரியம் செய்வதுண்டோ? உலகில் இல்லையன்றோ! அப்படியே அந்த கொங்குண்வண்டுகளும் நமக்கு ஸாக்ஷியம் சொல்ல மாட்டாவே! என்பதாகக் கொள்க. தகுந்த ஸாக்ஷிகளை வைத்து ஸம்ச்லேஷிக்கமாட்டாத பாவியானேனென்று தன்னைப் பொடிந்து கொள்ளுகின்றமைதோன்றக் ;கொடிமேற்கு; என்கிறாள். ஸாக்ஷிகளில்லையாகிலும் ஸம்ச்லேஷ காலத்தில் அவன் சொன்ன வார்த்தைகள் தானும் ஏதேனுமுண்டோ? என்று கேட்டாள் தோழி; ;கலவியில் நமக்குச் சொன்ன பாசுரங்கள் பலவுண்டு; நான் பிரியமாட்டேன் ; பிரிந்தால் தரிக்கமாட்டேன் ; உடனே வந்து கூடியே விடுவேன் ; பிரிந்து வருந்துவாருடைய வருத்தத்தைத் துளியும் காணமாட்டேன் ; பரமதயாளுத்வமே என்னுடைய பிரகிருதி காண் - என்றாற் போலே சொன்ன பாசுரங்களுக்கு அளவுண்டோ? அதன்படி ஒன்றும் செய்திலனே, அர்த்தமில்லாத வார்த்தைகளை யன்றோ சொல்லிப் போனாள் என்கிறாள்.

English Translation

O Heart! The nectar-drinking bees were witness to his visit. Sinful me! Out Lord has not kept the promise he made then. He went away to live in his temple lat Pullani by the sea where the surging waves wash out gems. Bow that-a-ways and arise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்